காஷ்மீரின் வளர்ச்சியை பாராட்டிய செர்ஜியோ கோர் :
காஷ்மீர் இந்தியாவில் ஒரு முக்கியமான பகுதியாக பார்க்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த பகுதியானது ஒரு பதட்டமான பகுதியாகத்தான் முன்பு பார்க்கப்பட்டது.
ஆனால் பிரதமர் மோடி ஆட்சி அமைத்தபின்பு இந்த பகுதியில் பெரிய மாற்றங்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் முற்றிலும் குறைந்துவிட்டதாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு மேற்கொண்ட தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
காஷ்மீர் முதலவர் உமர் அப்துல்லா மற்றும் அமெரிக்கா தூதர் சந்திப்பு :
ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவை சந்தித்த பின்னர் பேசிய செர்ஜியோ கோர், “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதி. இந்த பகுதி மிகவும் அழகானது
இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை” என்று கூறினார். மேலும், பாதுகாப்பு நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது :
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசும், யூனியன் பிரதேச நிர்வாகமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாதுகாப்பு சூழல் கணிசமாக மேம்பட்டுள்ளதாக செர்ஜியோ கோர் பாராட்டினார்.
இதன் காரணமாக, தற்போது அமலில் உள்ள அமெரிக்காவின் பயண எச்சரிக்கை அறிவிப்பை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் வட்டரங்கள் அதிர்ச்சி :
தூதர் கூறிய இந்த கருத்தால் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளி வருகின்றன எனவே இந்த கருத்தானது இந்தியா சாதகமாக இருந்தாலும் சர்வதேச அளவில் எப்பொழுது இது ஒரு பெரும் முக்கியம் துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
இதனிடையே இந்த கருத்தால் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க உயரதிகாரியை பாகிஸ்தான் அரசு நேரில் அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா உறவின் புதிய சிக்னல்?
இந்தியாவுடன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் அமெரிக்கா ஆர்வமாக இருப்பதை செர்ஜியோ கோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஜம்மு-காஷ்மீர் குறித்த அவரது சமீபத்திய கருத்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
இது இந்தியா - அமெரிக்கா உறவுகளில் முக்கியமான அரசியல் மற்றும் தூதரகச் செய்தியாக கருதப்படுகிறது.