Justice Surya Kant took office as the new 53rd Chief Justice of Supreme Court Of India 
இந்தியா

உச்ச நீதிமன்ற 53வது தலைமை நீதிபதி : பொறுப்பேற்றார் சூர்யகாந்த்

Justice Surya Kant As 53rd Chief Justice of Supreme Court Of India : உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த், பொறுப்பேற்றார்.

Kannan

ஓய்வு பெற்றார் பி.ஆர். கவாய்

Justice Surya Kant Taken Oath as 53rd Chief Justice Of India : உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்றார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், சனிக்கிழமையுடன் அவர் பணியில் இருந்து விடை பெற்றார். அவர் பரிந்துரையின் படி, மூத்த நீதிபதி சூர்யகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பதாக, ஜனாதிபதி முர்மு அறிவித்தார்.

பொறுப்பேற்றார் சூர்யகாந்த்

இந்தநிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அண்டை நாடுகளின் நீதிபதிகளும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

2027 பிப்ரவரி வரை பொறுப்பில் இருப்பார்

2019ம் ஆண்டு மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் நீதிபதி சூர்யகாந்த். தலைமை நீதிபதியாக இன்று பணியை துவங்கி இருக்கும் அவர், 2027, பிப்ரவரி 9ம் தேதி வரை, 15 மாதங்கள் இப்பதவியில் இருப்பார்.

முக்கிய வழக்குகளில் தீர்ப்பு

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், 'பெகாசஸ் ஸ்பைவேர்' வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த்

* நீதிபதி சூர்யகாந்த் தற்போது உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர். இவர் 1962ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். தற்போது சூர்யகாந்துக்கு வயது 63.

* ஹரியானாவில் பிறந்த சூர்யகாந்த் ஹிஸார் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1984ம் ஆண்டு வழக்கறிஞராக தனது நீதித்துறை வாழ்க்கையை தொடங்கினார்.

* இவர் ஹரியானா மாநில அரசு சார்பில் வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

* 2018ம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். 2019ம் ஆண்டு மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

* நவம்பர் 24ம் தேதி (இன்று) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். 2027 பிப்ரவரி வரை அவர் இந்தப் பதவியில் இருப்பார்.

==============