Jyoti Malhotra in Kerala government advertisement 
இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்: கேரள அரசு விளம்பரத்தில் எப்படி ?

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து பாஜக, காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

MTM

ஹரியானாவின் ஹிசார் நகரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா,பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் லாகூர் வீதிகளில், அவர் வீடியோ எடுத்தது வெளியாகி அவருக்கு உள்ள பாகிஸ்தான் தொடர்பை அம்பலப்படுத்தியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கேரள மாநில அரசு அளித்த பதிலில், கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 சமூக ஊடக செல்வாக்காளர்களுக்கு கேரள சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டது.

அவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர். அப்படி வந்தவர்களில் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கேரள சுற்றுாலத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ், கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக ஜோதி மல்ஹோத்ராவும் அழைக்கப்பட்டார்.கேரளாவில் உள்ள இடதுமுன்னணி அரசு உளவு பார்க்க உதவும் அரசு அல்ல. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரச்சாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே ஒருவரை அரசு அழைக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லாதனது எக்ஸ் பதிவில், கேரள சுற்றுலாத்துறையின் விருந்தினராக பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளாவுக்கு வந்துள்ளார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரியவந்துள்ளது. பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள். ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்களா? சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், முதல்வர் பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.