Karnataka decided to introduce AI education starting from Class 6, set to establish Artificial Intelligence university AI generated
இந்தியா

”முதல் அரசு AI பல்கலைக்கழகம்” : பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி : அசத்தப் போகும் கர்நாடகா..!

6ம் வகுப்பு முதலே ஏஐ கல்வியை கொண்டு வர முடிவு செய்துள்ள கர்நாடகா, செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகத்தையும் அமைக்க இருக்கிறது.

Kannan

செயற்கை நுண்ணறிவு

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இனி அனைத்து துறைகளிலும் கோலோச்ச போகிறது. ஏற்கனவே ஐடி துறையில் ஏஐ கலக்கி வருகிறது.

பள்ளிகளில் ஏஐ கல்வி

உலகளவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

திறன் வலுப்பெறும், வேலை கிடைக்கும்

ஆரம்பக் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம், மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன் மேம்படும் என்றும், எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்ப அவர்கள் தங்களைத் முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அரசு கருதுகிறது.

முதல் ஏஐ பல்கலைக்கழகம்

பள்ளிக் கல்வியோடு மட்டுமின்றி, உயர்கல்வியிலும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அரசு சார்பில் பல்கலை

இதற்காக, நாட்டிலேயே முதல்முறையாக மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் பிரத்யேக 'செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகம்' கர்நாடகாவில் நிறுவப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டு இருக்கிறார்.

ஏஐ ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம்

இந்த நவீன பல்கலைக்கழகம், ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பிரதான முக்கியத்துவம் அளித்துச் செயல்படும்.

திட்டத்தின் நோக்கம்

பெங்களூரு நகரம் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையமாக (ஐடி ஹப்) திகழும் நிலையில், அந்த அந்தஸ்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இந்த புதிய முன்னெடுப்புகள் உதவும் என கர்நாடக அரசு கருதுகிறது.

இதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் கர்நாடகா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதோடு, இளைஞர்களுக்கு ஏஐ சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

------------------------------------