Karnataka Malur Congress MLA Nanjegowda Case Update in Tamil 
இந்தியா

Karnataka : காங்கிரஸ் MLA வெற்றி செல்லாது : உயர்நீதிமன்றம் அதிரடி

Karnataka Malur MLA Nanjegowda : கர்நாடகாவில் மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சஞ்சேகவுடாவின் வெற்றி செல்லாது என்றும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட வேண்டும் எனவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kannan

காங்கிரஸ் எம்எல்ஏ சஞ்சாகவுடா :

Karnataka Malur Congress MLA Nanjegowda Case : கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கோலார் மாவட்டம் மாலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஒய்.சஞ்சேகவுடா(KY Nanjegowda MLA) வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட மஞ்சுநாத் கவுடாவை விட 248 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

பாஜக வழக்கு, நீதிமன்றம் விசாரணை :

இந்த வெற்றியை எதிர்த்தும், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாகவும் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் மஞ்சுநாத் கவுடா மனு தாக்கல் செய்து இருந்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

வெற்றி செல்லாது, நீதிமன்றம் அதிரடி :

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம்(Karnataka High Court), மாலூர் தொகுதி எம்எல்ஏவாக நஞ்சேகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டது(Malur MLA) செல்லாது என்று அறிவித்தது. எனவே, 4 வாரங்களுக்குள் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிவை அறிவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி :

கர்நாடக நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு ஆளும் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது. மத்திய பாஜக அரசு மீது, வாக்கு திருட்டு என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் சுமத்தி வரும் நிலையில், அந்தக் கட்சி எம்எல்ஏவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்து இருக்கிறது.

மேலும் படிக்க : தர்மஸ்தலா வழக்கு : சித்தராமையா மன்னிப்புக்கேட்க வேண்டும்

மேல்முறையீடு செய்ய அனுமதி :

நஞ்சேகவுடா தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக ஐகோர்ட் அனுமதித்தது. அதன் அடிப்படையில், நஞ்சேகவுடா(Nanjegowda Case) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வது, அல்லது நிறுத்தி வைக்கும் உத்தரவை பெற வேண்டும். இல்லாவிட்டால், மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நஞ்சேகவுடா இழக்க நேரிடும்.

-----