காசித் தமிழ்ச் சங்கமம்
காசித் தமிழ்ச் சங்கமம் (KTS) என்பது அறிவைத் தேடுவதிலும் இந்தியப் பண்பாட்டின் ஒற்றுமையை அடையாளம் காண்பதிலும் தொடர்ந்து நடைபெறும் பயணமாகும்.
"ஒரே பாரதம் உன்னத பாரதம்"
முந்தைய நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த முயற்சியும் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான பண்பாடு, அறிவுசார் உறவுகளை வலுப்படுத்தி, "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்னும் உணர்வை வெளிப்படுத்துகிறது.
காசித் தமிழ்ச் சங்கமம் 5.0
காசித் தமிழ்ச் சங்கமம் 5.0ன் மையக் கருத்து "திருக்குறள் பயில்வோம்" என்பதாகும். காசி தமிழ் சங்கமம் 5.0 - 28 நவம்பர் 2026 முதல் 12 டிசம்பர் 2026 வரை நடைபெற இருக்கிறது.
வாரணாசிக்கு சிறப்பு ரயில்கள்
எனவே, தமிழகத்தில் இருந்து காசிக்கு அதாவது வாரணாசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கன்னியாகுமரி to வாரணாசி
அதன்படி, கன்னியாகுமரியில் இருந்து, வரும் 25ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 27ஆம் தேதி இரவு வாரணாசி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் டிசம்பர் 1ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசியில் புறப்பட்டு, டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி வந்தடையும் என்றும் கூறியுள்ளது.
அதேபோல, டிசம்பர் 3ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 9ஆம் தேதி வாரணாசியில் இருந்து திரும்புகிறது.
சென்னை to வாரணாசி
சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு வாரணாசி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் டிசம்பர் 3ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு டிசம்பர் 5ஆம் தேதி மாலை சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 2ஆம் தேதி ஒரு சிறப்பு ரயிலும், டிசம்பர் 8ஆம் தேதி ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.
கோவை to வாரணாசி
கோவையில் நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 1ஆம் தேதி இரவு வாரணாசி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு 7ஆம் தேதி இரவு கோவை வந்தடையும் என்றும் கூறியுள்ளது.
இதேபோல, டிசம்பர் 5ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 11ஆம் தேதி வாரணாசியில் இருந்து திரும்புகிறது.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
=======================