எந்த நாய்களுக்கு அனுமதி?
குணப்படுத்த முடியாத, வலிமிகுந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத அளவுக்கு காயமடைந்த நாய்கள், வெறிநோய் உறுதி செய்யப்பட்ட நாய்கள் .
அதுமட்டுமல்லாமல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்கள் அல்லது பிற விலங்குகளை தாக்கும் ஆபத்தான ஆக்ரோஷமான நாய்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே கருணைக் கொலை பரிசீலிக்கப்படும்.
குழுவின் பரிந்துரை அவசியம் :
இந்த நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. இதற்காக Stray Dog Management Committee அமைக்கப்பட்டு, அதன் எழுத்துப்பூர்வ பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் மட்டுமே கருணைக் கொலை நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.
கொடூரமான முறைகளுக்கு தடை :
நாய்களை விஷம் வைத்து கொல்வது, துப்பாக்கியால் சுடுவது அல்லது வேறு கொடூரமான முறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையில், விலங்குக்கு தேவையற்ற வலி ஏற்படாத வகையில் மட்டுமே நடைமுறை மேற்கொள்ள வேண்டும்.
2 முதல் 3 நாட்கள் அவகாசம் :
பிடிக்கப்படும் நாய்களை உடனடியாக கருணைக் கொலை செய்யாமல், முதலில் 2 முதல் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடம் அல்லது தங்குமிடத்தில் வைத்திருக்க வேண்டும்.
இந்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விலங்கு நல அமைப்புகள் அல்லது தனிநபர்கள் அந்த நாயை பொறுப்பேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
கண்காணிப்புடன் நடவடிக்கை :
ஒவ்வொரு சம்பவத்திற்கும் தனிப்பட்ட பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும்.நாய் பிடிக்கப்பட்ட இடம், புகைப்படம், கருணைக் கொலைக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதன் மூலம், தெருநாய் பிரச்சினையை கட்டுப்படுத்துவதுடன், விலங்குகள் மீதான கொடுமையைத் தவிர்த்து சட்ட விதிகளுக்கு உட்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.