https://www.facebook.com/kolusu.parthasarathy.official
இந்தியா

தினமும் 10 மணி நேரம் வேலை : சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் 10 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

MTM

ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் பேசினார்.

தற்போதைய சட்ட திருத்தத்தின் படி 9 மணி நேர வேலை 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஐந்து மணி நேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு என்பது ஆறு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த திருத்தங்கள் மூலம் முதலீட்டாளர்கள் அதிக அளவில் நமது மாநிலத்திற்கு வருவார்கள் என்றும் உலகளாவிய விதிகளை செயல்படுத்த இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ,நீங்கள் கூடுதலாக வேலை செய்யும் போது வருமானம் அதிகரிக்கும் .குறிப்பாக பெண்கள் முறையான துறைகளில் பணியாற்ற முடியும். இதன் மூலம் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் ஏற்படும் என்று கூறினார்.

இதனிடையே அமைச்சரவையின் இந்த முடிவிற்கு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.