இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு :
India's Crude Oil Import From Russia Data 2025 : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன் மூலம் கிடைக்கும் பணம், உக்ரைன் போரில் பயன்படுத்தப்படுவதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியது. கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டதால், இந்தியா மீது முதலில் 25 சதவீத வரி, அடுத்து 25 அபராத வரி விதித்து நெருக்கடி கொடுத்தார் டிரம்ப்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரியை அதிகரிக்குமாறு, ஐரோப்பிய நாடுகளுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் டிரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அமெரிக்கா மிரட்டல் - இந்தியா பதிலடி :
அமெரிக்காவின் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை கடந்த மாதம் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது(India Crude Oil Import from Russia in Rupees). ஜூலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி 28,000 கோடி ரூபாயாக இருந்தது. கொள்முதலை இந்தியா அதிகரித்து இருப்பதை இறக்குமதி தரவுகளும் உறுதி செய்துள்ளன.
கூடுதலாக கச்சா எண்ணெய் கொள்முதல் :
இந்தியா கச்சா எண்ணெய்(Russia Crude Oil) மட்டுமின்றி, நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ரகங்களையும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. மற்ற நாடுகள், இயற்கை எரிவாயு, குழாய் எரிவாயு உள்ளிட்ட பிற புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் டிரம்ப் அரசின் நெருக்கடியை பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கி வருகிறது.
மேலும் படிக்க : Russia: குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்: ரஷ்யா அதிரடி
ரூ. 47,000 கோடிக்கு இறக்குமதி :
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பிற்கு பிறகு(US Tariffs on India), இந்தியாவிற்கு கூடுதல் சலுகையுடன் ரஷ்யா கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா துளியளவும் அஞ்சவில்லை. மாறாக, இந்தியா தற்போது ரஷ்யா மட்டுமின்றி சீனாவுடனான தனது உறவையும் அதிகரித்துள்ளது. மேலும், வரி விதிப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து அதாவது சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
==================