ஐடி பணிகள் இளைஞர்கள் ஆர்வம் :
ZOHO Job Vacancy in Chennai : ஐடி பணியில் சேர வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது. குறிப்பாக பிரபல நிறுவனங்களில் பணியை பெற்று விட பலரும் முயன்று வருகின்றனர். அப்படி முயற்சி செய்வோரின் கனவை நிறைவேற்றும் வகையில், ஜோஹோ ஐடி நிறுவனம் பணி வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜோஹோவில் டெக்னிக்கல் ரைட்டர் பணி :
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோவில் டெக்னிக்கல் ரைட்டர் (Technical Writer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
ஆங்கிலம் தெரிந்தால் போதும் :
அதேபோல் Fresher ஆக இருப்போரும் விண்ணப்பம் செய்யலாம். கல்லூரியில் ஏதேனும் பிரிவில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாமல் இந்த பணியை விரும்புவோர் என்றால், அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
கடினமாக உழைக்க வேண்டும் :
புதிய அம்சங்களை கற்க ஆர்வமாக இருக்க வேண்டும். கடினமாக உழைக்க ஆர்வமாக இருக்க வேண்டும். அதிகம் வாசிக்கும் நபராக இருக்க வேண்டும். 2026ம் ஆண்டில் பட்டப் படிப்பை முடிப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யக் கூடாது.
விண்ணபிப்போருக்கு அறிவுரை :
அண்மையில் அல்லது அடிக்கடி ஜோஹோவில் நேர்காணலில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அதனையும் மீறி ஒருவேளை விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் நபர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படும்.
தமிழ்நாட்டில் பணி நியமனம் :
பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படுவார்கள். எங்கு செல்ல நியமன ஆணை கொடுத்தாலும், பணி செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
திறமை அடிப்படையில் ஊதியம் :
திறமை, பணி அனுபவம் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். விண்ணப்பித்தோரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும், இவ்வாறு ஜோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Click Here To Apply : ZOHO Job Vacancy 2025
==========