Let's see which goods' prices are going to decrease due to the trade agreement between India and the European Union 
இந்தியா

HIstoric Deal, India-EU FTA: விலை குறையும் பொருட்கள், இதோ பட்டியல்

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மூலம் எந்தெந்த பொருட்களின் விலைகள் குறைய போகின்றன என்பதை பார்க்கலாம்.

Kannan

"அனைத்து ஒப்பந்தங்களின் தாய்"

Chocolates, wines, cars: get cheaper for Indians after giant EU trade deal : "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" (mother of all deals) என்று அடிக்கடி அழைக்கப்படும் இந்தியா - ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இது 11 ஆண்டுகால இந்தியாவின் கனவை நனவாக்கி இருக்கிறது.

தடையற்ற வணிக ஒப்பந்தம்

வணிக அமைச்சகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" (mother of all deals) என்று அடிக்கடி வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்திய வணிகங்களுக்கு பெரும் பயன்

இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி இருந்தாலும், 2027ம் ஆண்டு தொடக்கத்தில் தான் நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் இந்திய நுகர்வோருக்கும் வணிகங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எந்தெந்த பொருள்களின் விலை குறையும்?

1. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற ஐரோப்பிய நாடுகளின் சொகுசு கார்கள். இறக்குமதி வரி 110%-ல் இருந்து 40% ஆக குறையும்.

2. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள்

3. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கி, ஓட்கா மற்றும் ஜின்

4. பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைரங்கள், வைர நகைகள்

5. சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்திலிருந்து கொண்டு வரப்படும் பிரீமியம் வகை ஐரோப்பிய சாக்லேட்டுகள்

6. மூக்குக் கண்ணாடி, மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களுக்கான இறக்குமதி வரி முற்றிலுமாக நீக்கம்

7. இரும்பு, ஸ்டீல் மீதான இறக்குமதி வரி பூஜ்யம் சதவீதமாக மாறும்.

இந்திய சந்தைக்கு பாதுகாப்பு

அமெரிக்காவின் மாறிவரும் வர்த்தகக் கொள்கைகள் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட இந்த நெருக்கம், இந்திய சந்தையைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் பெரிதும்