like 'Karappan Janata Party', a party named 'E20 Janata Party' launched to oppose blending of ethanol with petrol AI generated
இந்தியா

"E20 ஜனதா கட்சி உதயம், டார்கெட் நிதின் கட்கரி” : டெல்லியில் ஆக.4ல் பேரணி, பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு எதிர்ப்பு.!

கரப்பான் ஜனதா கட்சியை போல பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு எதிராக E20 ஜனதா கட்சி என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

Kannan

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

E20 Janta Party demands the freedom to choose 100% original fuel at a discounted price and the resignation of Union Minister Nitin Gadkari

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்வைத்த கரப்பான் பூச்சி என்ற விமர்சனம், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவாக காரணமாக அமைந்தது.

70 நாட்களில் பெரிய அளவில் போராட்டம்

இயக்கமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 70 நாட்களில் மத்திய அரசையே அசைத்து பார்த்து இருக்கிறது. நீட் வினாத்தாள் லீக், தர்மேந்திர பிரதான் பதவி விலகலை முன்வைத்து, 35 நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்தது சிஜேபி.

அமைச்சர் ராஜினாமா - சிஜேபி வெற்றி

டெல்லி ஆர்ப்பாட்டம், பேரணி என தலைநகரை ஸ்தம்பிக்க செய்த. இந்தக் கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகலுக்கு பிறகு போராட்டத்தை நிறைவு செய்து இருக்கிறார்கள்.

E20 ஜனதா கட்சி

இந்தநிலையில், E20 ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எடுத்த போராட்டத்தை முன்மாதிரியாக கொண்டு இந்தக் கட்சி களத்திற்கு வந்திருக்கிறது.

பெட்ரோலில் 20% எத்தனால்

மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை முழுமையாக அமல்படுத்திய நிலையில், வாகனங்கள் பழுதாகும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து E20 ஜனதா கட்சி உருவாகியுள்ளது.

எத்தனால் கலப்பிற்கு எதிர்ப்பு

100% தூய்மையான பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும், நுகர்வோருக்கு எரிபொருள் தேர்வு உரிமை வழங்க வேண்டும் என கோருகிறது.

ஆக. 4ல் டெல்லியில் பேரணி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராஜினாமா கோரியும், ஆகஸ்ட் 4 அன்று டெல்லி பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 2014ம் ஆண்டு சோதனை முயற்சியாக பெட்ரோலில் 1.5 சதவீதம் எத்தனாலை கலந்தது. அதன் பின்னர் இந்த விகிதம் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 மி.லி. எத்தனால்

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் எரிபொருளில் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

அதேசமயம் பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகுவதாகவும் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து E20 ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாகியுள்ளது. எத்தனால் கலக்கப்படாத 100% தூய்மையான பெட்ரோலையும் பெட்ரோல் பங்குகளில் விற்பனை செய்ய வேண்டும்.

நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளைத் தேர்வு செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்பதும் இவர்களின் பிரதான கோரிக்கை.

27 ஆயிரம் பின்தொடர்பாளர்கள்

எக்ஸ் (X) தளத்தில் உருவெடுத்துள்ள இக்கட்சியின் கணக்கு குறுகிய காலத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளது.

நாடாளுமன்றம் நோக்கி பேரணி

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தனது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி டாக்ஸி மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=================