LPG cylinder: To get it at subsidized price, KYC update is mandatory; August 15 is the last day  google
இந்தியா

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் : மானிய விலையில் கிடைக்க, KYC புதுப்பிப்பு கட்டாயம் : ஆக.15 கெடு, எண்ணெய் நிறுவனங்கள்..

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க, வரும் ஆகஸ்ட் 15-க்குள் eKYC செய்வது கட்டாயம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

Rohini

சிலிண்டர் மானிய விலையில் கிடைக்க kyc புதுப்பிப்பு கட்டாயம்

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க, வரும் ஆகஸ்ட் 15-க்குள் eKYC செய்வது கட்டாயம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளுன

அதன்படி அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

குறிப்பாக எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1 முதல் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை கணிசமாகக் குறைத்து இருப்பினும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகச் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது

இதனுடன், எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றித் தொடர, நுகர்வோர் விரைவாக 'இ-கேஒய்சி' (e-KYC) நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அதன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது

குறுஞ்செய்தி தகவலை சரிப்பார்த்து , e-KYC வழிமுறையை பின்பற்றி கொள்ள வேண்டும், எண்ணெய் நிறுவனங்கள்

உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும், e-KYC வழிமுறை குறித்தான வழிக்காட்டுதல்களை பின்பற்றி அந்த சரிப்பார்ப்பு முறையை பின்பற்றி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது ,

குறிப்பாக ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் இந்த சரிப்பார்ப்பு முறையை நிறைவு செய்திருக்க வேண்டும், இல்லையெனில் குறிப்பிட்ட விலையில் எல்பிஜி சிலிண்டர் வாங்குவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளும் இதை பின்பற்ரி உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்

இந்த e-KYC புதுப்பிப்பானது, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்பிஜி இ-கேஒய்சி-ஐ முடிப்பது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பயனாளிகளை தாண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை

தகவல்களின்படி, இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு நான்கு முறை எல்பிஜி (LPG) சிலிண்டர்களை நிரப்புவதற்கு, நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) முறையில் ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் வழங்கப்படுகிறது. முன்னதாக, மானியம் வழங்கப்படும்

சிலிண்டர்களின் எண்ணிக்கை 9-ஆக இருந்தது. அந்த விதி கடந்த ஜூன் மாதம் மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது, எனவே மறக்காமல் இறுதி தேதிக்கும் இந்த் கேஒசி புதுப்பிப்பு முறையை சரிசெய்து கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது

===========================