தோனிக்கு கால்பந்து மீது ஆர்வம்
Mahendra Singh Dhoni celebrates his birthday on July 7. Born in 1981 in Ranchi, India, the legendary former Indian cricket captain and Chennai Super Kings icon turns 45 years old :
பிகாரின் ஒரு பகுதியாக இருந்த ராஞ்சியில் 1981 ஜூலை 7 பிறந்தார் தோனி. ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டின் மீதுதான் அதீத ஆர்வம் இருந்தது.
பயிற்சியாளரால் மாறிய பாதை
ஒரு சிறந்த கோல்கீப்பராக விளங்கிய அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகளைக் கண்ட பள்ளி பயிற்சியாளர், அவரை விக்கெட் கீப்பராக முயற்சி செய்ய ஊக்குவித்தார். இந்த ஒரு முடிவு அவரது வாழ்க்கையையே மாற்றியமைத்தது.
ரஞ்சி கோப்பை தொடரில் தோனி
1999-2000 ரஞ்சி கோப்பை தொடரில் பீகார் அணிக்காக அறிமுகமாகி உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடங்கினார். மேற்கு வங்கத்தின் கரக்பூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக (டிடிஇ) தோனி பணியாற்றினார்.
ரயில்வே பணியில் தோனி
கடினமான வேலை நேரங்களுக்கு மத்தியிலும், கிரிக்கெட் பயிற்சியைத் தோனி கைவிடவில்லை. அரசு வேலையின் பாதுகாப்பை விட, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற அவரது கனவு மட்டுமே முக்கியமானதாக இருந்தது.
இந்திய அணியில் தோனி
தோனியின் அதிரடியான பேட்டிங்க, கீப்பிங் முறை தேர்வுக்குழுவினரை ஈர்க்க, 2003-04 சீசனில் கென்யா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு சென்ற இந்தியா ஏ அணியில் தோனிக்கு இடம் கிடைத்தது.
அதிரடி காட்டி ரன்களைக் குவித்து அசத்திய தோனி, 2004ல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.
ரன்குவிப்பில் தோனி
அதன்பிறகு அவரது ஓட்டம் நிற்கவே இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளாசிய அதிரடி 148 ரன்கள், இந்தியாவுக்கு புதிய ஜாம்பவான் கிடைத்து விட்டதை சொல்லியது.
இந்திய அணியை வழிநடத்திய தோனி
இடைவிடாத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மட்டுமே உயர்ந்த தோனி, பின்னர் இந்திய அணியை 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல வழிநடத்தினார். இது வெறும் வாய்ப்புகளால் கிடைத்தது கிடையாது. கடின உழைப்பால் தோனிக்கு கிடைத்த கௌரவம் ஆகும்.
'கேப்டன் கூல்' தோனி
கடினமான கால கட்டங்களில் கடந்து வந்ததே தோனியை, 'கேப்டன் கூல்' ஆகவும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் அமைதியாகச் செயல்படும் கேப்டனாகவும் செதுக்கின.
ஹெலிகாப்டர் ஷாட்கள் மற்றும் இமாலய சாதனைகள் அவரது கிரிக்கெட் வரலாற்றில் அழியாத காவியமாக நிலைத்திருக்கின்றன. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி என்ற பெயர் கிரிக்கெட் இருக்கும்வரை நிலைத்து நிற்கும்
இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடும் மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
======================