பொது நல மனு தாக்கல்
Supreme Court on Menstrual Leave Mandatory : பெண்களின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது
மாதவிடாயின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, மாதவிடாய் விடுப்புடன் கூடிய ஊதியமும், மாணவிகளுக்கு விடுமுறையும் அளிக்கும் கொள்கை மற்றும் அதற்கான உரிய சட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று சைலேந்திர மணி திரிபாதி அந்த மனுவில் கோரிக்கையாக முன் வைத்திருந்தார்.
மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்சத் ஆஜராகி, மாதவிடாய் விடுப்பு அளிப்பது கர்நாடகம், ஒடிசா, கேரளத்தில் நடைமுறையில் உள்ளது என வாதிட்டார்.
நீதிபதிகள் கூறியதாவது
இந்த விடுப்பு விவகாரத்தில் எந்தப் பெண்ணும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை. மாதவிடாய் விடுப்பு அளிக்க உரிமை கோருவது மகளிரின் வளர்ச்சிக்கு எதிரானதாக அமையும். தாமாக முன்வந்து விடுமுறை அளித்தால் அது நல்லது. ஆனால்,
சட்டம் இயற்ற முடியாது
மாதவிடாய் விடுமுறையை அளிப்பதை கட்டாயமாக்க கோரி சட்டம் இயற்றினால், மகளிருக்கான வேலைவாய்ப்பை பாதிக்கும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.