இண்டியா கூட்டணி
மக்களவை தேர்தலுக்கு பிறகு தொய்வை சந்தித்த இண்டியா கூட்டணி, அதன்பிறகு ஒருங்கிணைப்பு கூட்டம் எதையும் நடத்தவில்லை. நாடாளுமன்றத்தில் கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகள் ஒருசேர குரல் கொடுத்தாலும், மாநில தேர்தல்களில் எல்லாம் தலைகீழாக மாறி விடுகிறது.
வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி
தொடங்கப்பட்ட காலத்தில் 28 கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்று இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகள் ஏற்கனவே கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன.
திமுக புறக்கணிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காட்சிகள் மாறி, தவெகவை ஆதரித்து, ஆட்சியில் பங்கு பெற்றது காங்கிரஸ். இதனால், காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் இருக்கும் திமுக இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணித்தது.
நாடாளுமன்றத்திலும் தங்களுக்கு தனி இடம் ஒதுக்குமாறு, திமுக கோரியுள்ளது. இதனால், பாஜக பக்கம் திமுக சாய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கார்கே, ராகுல், சோனியா பங்கேற்பு
இந்தநிலையில், இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல், சோனியா பங்கேற்றனர்.
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த திரிணாமூல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தனி அணியாக செயல்படுவதால், மம்தா கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
மம்தா பானர்ஜி பங்கேற்பு
எனவே, இண்டியா கூட்டணி கூட்டத்தில் அவர் வலியவந்து கலந்து கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கிடைக்காமல் நிற்கும் மம்தா, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, எம்பியாக டெல்லி அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
வைகோ, திருமா பங்கேற்பு
தமிழகத்திலிருந்து வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மதிமுகவும், விடுதலை சிறுத்தைகளும் தேர்தலில் திமுக கூட்டணியில் பங்கு பெற்றாலும், பின்னர் திருமா தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
வைகோ இதுவரை அத்தகைய முடிவு எதையும் அறிவிக்கா விட்டாலும், தவெகவை ஆதரித்து பேசி வருகிறார்.
23 கட்சிகள் பங்கேற்பு
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி என, 23 கட்சிகளின் தலைவர்கள் இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இண்டியா கூட்டணியை வலுப்படுத்துவது, திமுக, ஆம் ஆத்மி வெளியேறினால் ஏற்படும் பாதிப்புகள், அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
=============================