Mamata Banerjee adamant that we did not lose the West Bengal elections, will not resign as Chief Minister google
இந்தியா

West Bengal : "முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்” : தோல்வி அடையவில்லை, மம்தா பிடிவாதம்! பாஜகவுக்கு சவால்...

மேற்கு வங்க தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மம்தா பானர்ஜி பிடிவாதமாக உள்ளார்.

Kannan

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 207 இடங்களையும், ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 80 இடங்களையும் கைப்பற்றின.

15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தாவின் கோட்டையை தன் வசப்படுத்தி இருக்கிறது பாஜக. காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ராஜினாமா செய்ய மாட்டேன்

தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ” நான் முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்​யப்​ போவ​தில்​லை. நாங்​கள் இந்​தத் தேர்​தலில் தோற்​க​வில்​லை.

களவாடப்பட்ட வெற்றி

மாறாக எங்​கள் வெற்றி களவாடப்​பட்​டது. நான் ராஜி​னாமா செய்ய மாட்​டேன். அடுத்​தக்​கட்ட நகர்வு குறித்து எனது கட்​சி​யினர் ஒன்​றுகூடி ஒரு​மித்த முடிவை எட்​டு​வோம்.

எங்களுக்கு தார்மீக வெற்றி

தேர்​தலில் பெரியள​வில் வன்​முறை நடந்​துள்​ளது. காவல்​துறை, தேர்​தல் ஆணை​யம் என அமைப்பு ரீதியி​லான தாக்​குதல்​கள் நடந்​துள்​ளன. இந்​தத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் தார்​மிக வெற்றி பெற்​றிருக்​கிறது.

எங்​களு​டைய போட்டி பாஜக​வுக்கு எதி​ரானது அல்ல. அது தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ரானது. இந்​தத் தேர்​தலில் அவர்​கள் நியாய​மான வெற்​றியைப் பெற்​றிருப்​பார்​கள் என்​றால் நான் புலம்​பி​யிருக்க மாட்​டேன்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

வாக்​காளர் பட்​டியலிலேயே அவர்​கள் குளறு​படிகளை ஆரம்​பித்​து​விட்​டனர். 90 லட்​சம் வாக்​காளர்​கள் பெயர்​களை நீக்​கி​யிருந்​தனர். நாங்​கள் நீதி​மன்​றம் சென்று 32 லட்​சம் வாக்​காளர்​கள் பெயரை மீட்​டெடுத்​தோம்.

அதன் பின்​னர் 7 லட்​சம் வாக்​காளர்​கள் பெயர்​கள் இணைக்​கப்​பட்​டன. அது எப்​படி என்று இது​வரை யாருக்​கும் தெரி​யாது.

நான் இதுவரை சந்திக்காத தேர்தல்

நான் என் வாழ்​நாளில் இத்​தகைய தேர்​தலை சந்​தித்​த​தில்​லை. 2004-க்​குப் பின்​னர் இது​போன்ற அராஜகங்​களைப் பார்த்​ததும் இல்​லை. வாக்கு எண்​ணிக்​கை​யின் போது பரவலாக வன்​முறைச் சம்​பவங்​கள் நடந்​தன.

முதல் சுற்று முடி​விலேயே பாஜக இத்​தனை இடங்​களைப் பெறக்​கூடும் என்று கூறப்பட்டது. காவல் துறை​யும், மத்​தி​யப் படைகளும் என்​னை​ சுதந்​திர​மாக நடமாட​விட​வில்​லை.

என் மீது தாக்குதல்!

என்னை அடிவ​யிற்​றி​லும், பின்​புறத்​தி​லும் எட்டி உதைத்​தனர். என்னை வாக்கு எண்​ணும் மையத்​திலிருந்து தூக்கி வீசினர். ஒரு பெண்​ணான என்​னிடம் அவர்​கள் தகாத முறை​யில் நடந்து கொண்​டனர்.

ஆனால் இதைப் பற்​றியெல்​லாம் நாங்​கள் யாரிடம் புகார் செய்​வோம். எல்லா அமைப்​பு​களும் பாஜக​வால் விலைக்கு வாங்​கப்​பட்​டு ​விட்​டன.

தோல்வியில் இருந்து மீள்வோம்

தோல்​வியி​லிருந்து நாங்​கள் மீண்​டெழு​வோம். நாங்​கள் புலியைப் போல் போராடினோம். இனி​யும் போராடு​வோம். எனக்கு நாற்​காலி, அதி​காரம் பற்றி கவலை​யில்​லை.

இந்தியா கூட்டணி ஆதரவு

எனக்கு மக்​கள் மீது​தான் அக்​கறை. இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​கள் தேர்​தல் முடிவுக்​குப் பின்​னர் என்​னுடன் பேசினர்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வால், மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே, ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன், பிஹார் முன்​னாள் துணை முதல்​வர் தேஜஸ்வி யாதவ் என்னை அழைத்​துப் பேசினர்.

பாஜகவுக்கு எச்சரிக்கை

பாஜக​வுக்கு ஒரு விஷ​யத்தை எச்​சரிக்​கை​யாக சொல்ல விரும்​பு​கிறேன். நீங்​கள் மத்​தி​யில் அதி​காரத்​தில் இல்​லாத போது இதே மாதிரி​யான நிலை​மையை எதிர்​கொள்ள நேரிடும். உங்​களது தேவையெல்​லாம் நாடு முழு​வதும் ஒற்​றைக் கட்சி ஆட்​சி.

பாஜக பிம்பம் உடைக்கப்படும்

எதிர்க்​கட்​சியே இருக்​கக் கூடாது என்று நினைக்​கிறீர்​கள். இதுவே தொடர்ந்​தால் உங்​களது பிம்​பம் உடைபடும். ஜனநாயகத்​தின் மாண்பை மறந்​து​விட்​டீர்​கள். நாங்​கள் தொடர்ந்து போராடு​வோம். மிரட்​டலுக்கு அஞ்​ச​மாட்​டோம்” இவ்​வாறு மம்தா பானர்ஜி தெரிவித்​தார்.

=====