Mekethatu Dam issue: Chief Minister Vijay orders to intensify legal fight  google
இந்தியா

மேகேதாட்டு அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு...

விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Rohini

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட பூமி பூஜை நடத்த கர்நாடக அரசு உத்தேசித்துள்ள நிலையில், ‘தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக அமையக் கூடிய மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வர் தலைமையில் ஆலோசனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வினை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும். விவசாயிகளின் நலனைக் காத்திடவும். காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காவிரியில் புதிய அணை - நீதிமன்றத்தில் வழக்கு

இக்கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மேகதாது அணையுடன் தொடர்புடைய இவ்வழக்கில் 13.11.2025 அன்று உச்சநீதிமன்றம் மேகதாது அணை அனுமதியையும் அளிக்கவில்லை விசாரித்த மாண்பமை திட்டத்திற்கு எவ்வித என்றும்,

இத்திட்டம் தொடக்கநிலையில் தான் உள்ளது என்றும், இத்திட்டம் மாண்பமை உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்து, இவ்வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

13.11.2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக்காலத்தில் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்ட நடவடிக்கை தீவிரம்

மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்குப்பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

=========================