Members of 'Cockroach Party' held talks with Union Minister Nadda put forward key demands AI generated
இந்தியா

”தர்மேந்திர பிரதான் ராஜினாமா, நாளைவரை அவகாசம்” : நட்டாவுடன் CJP நிர்வாகிகள் பேச்சுவார்த்தை: சுமூக முடிவு எட்டப்படுமா.?

மத்திய அமைச்சர் நட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய கரப்பான் பூச்சி கட்சியினர், முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Kannan

கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் தற்கொலை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை ஆகியவற்றை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் நடத்தி வரும் தொடர் போராட்டம் தீவிரம் பெற்று இருக்கிறது.

குவியும் ஆதரவு

அவர்களுக்கு ஆதாரவு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அசாதாரண சூழல் உருவாகி இருக்கிறது.

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

எதிர்க்கட்சி எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், 5 நாட்களாக எந்த அலுவலும் நடைபெறவில்லை. அவை நடவடிக்கைகள் முடங்கி கிடக்கின்றன.

மத்திய அமைச்சருடன் சிஜேபி பேச்சுவார்த்தை

இந்தநிலையில், டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

முக்கிய கோரிக்கைகள்

பேச்சுவார்த்தையும் போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன் வைத்த நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கொடுக்கவும்...

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவான வழக்குகளை திரும்ப பெறவும் மத்திய ஒப்புதல் தெரிவித்துள்ளதாக சிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான் விவகாரம் - நாளைவரை அவகாசம்

அதேபோல் தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் நாளை வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக 3 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

பிரதான் விவகாரத்தில் சமரசம் இல்லை

இதுதொடர்பாக சிஜேபி கட்சியின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தர்மேந்திர பிரதான் ராஜினாமா விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்பதை உறுதியாக கூறியுள்ளோம்.

தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் நாளை வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது.

இரண்டு கோரிக்கைகள் ஏற்பு

போராடி வரும் மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கொடுக்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று தெரிவித்தனர்.

நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

இதன்பின் ஜேபி நட்டா பேசுகையில், 3 கோரிக்கைகளையும், 5 சீர்திருத்த பரிந்துரைகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

=====

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/neet-protest-union-govt-accepts-cjp-2-demands-and-seeks-time-on-dharmendra-pradhan-issue-818681.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards