Military project to be set up in Tamil Nadu transferred to Andhra Pradesh: Valued at ₹15,000 crore  google
இந்தியா

ஓசூரில் அமையவிருந்த விமான மையம் ஆந்திராவிற்கு மாற்றம் : கைவிட்டு போன வாய்ப்பு, மதிப்பு ₹15,000 கோடி!

மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டத்தை ஆந்திராவிற்கு வழங்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Rohini

ஆந்திராவிற்கு மாற்றப்பட்ட ராணுவ திட்டம்

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை ஸ்டெல்த் ராடாரில் சிக்காத போர் விமானங்களைச் சோதனை செய்யும் மற்றும் தயாரிக்கும் மெகா மையம் தமிழ்நாட்டின் ஓசூரில் அமைவதாக இருந்த நிலையில இது தற்போது அந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது . இதன் மதிப்பு ₹15,000 கோடியாகும்.

இதன் பிண்ணனி என்ன

இந்தியாவின் மிக முக்கியமான ஒரு ராணுவத் திட்டத்தை (Advanced Medium Combat Aircraft - AMCA) தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் கொண்டு வர தமிழக அரசு கடந்த 3 வருடங்களாக முயற்சி செய்து வந்தது .

குறிப்பாக இத்திட்டத்திற்காக தமிழ்நாடு 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன்வந்தது. குறிப்பாக பெங்களூரு விமாநாபுராவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு பக்கத்திலேயே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தான் அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக ஆந்திராவிற்கு வழங்கிவிட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகதரத்தில் திட்டம் எற்பாடு

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை ஸ்டெல்த் (ராடாரில் சிக்காத) போர் விமானங்களைச் சோதனை செய்யும் மற்றும் தயாரிக்கும் மெகா மையம் தமிழ்நாட்டின் ஓசூரில் அமைவதாக இருந்தது. இதன் மதிப்பு ₹15,000 கோடியாகும். ஓசூரில் புதிதாக அமையவிருக்கும் விமான நிலையத்தோடு சேர்த்து,

இந்த ராணுவ மையத்தையும் கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு , டிஆர்டிஓ உடன் (மத்திய அரசுடன்) தீவிரமாகப் பேசி வந்தது.

ஒரு பக்கம் பயணிகள் விமானம், மறுபக்கம் இந்த ராணுவ விமானச் சோதனை மையம் என ஓசூரை உலகத் தரத்தில் மாற்றத் திட்டமும் மத்திய அரசிடம் இருந்த வந்தது குறிப்பிடதக்கது

அந்திராவிற்கு மாறிய திட்டம்

தமிழ்நாடு, ஆந்திரா என இரண்டு மாநிலங்களுக்கும் இடையே இந்த திட்டத்தை பெறுவதில் பிராந்தியப் போட்டி நிலவி வந்த நிலையில் தர்போது மத்திய அரசு ஆந்திராவிற்கு ஆதரவு தந்துள்ளது.

புதிய திட்டதிற்கு அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாட்டில் அமையவிருந்த இந்த திட்டம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்ட திட்டதிற்கு ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைந்து தற்போது அடிக்கல் நாட்டிஇருக்கின்றனர்

மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்

இவ்வளவு சாதகமான விதிமுறைகளை வழங்கிய போதிலும், புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டிற்கு அருகில் நிலம் அடையாளம் காணப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தில் இத்திட்டத்தைத் தொடருமாறு DRDO-விற்குப் பின்னர் உத்தரவிடப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை, இந்த இடத்தை மாற்றியதற்கான எந்தக் காரணத்தையும் DRDO அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்ல என்றும் இது குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

===============