Minister Kiran Rajiju has accused Rahul Gandhi of being a major threat to country's security source : google
இந்தியா

நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவராக ராகுல்காந்தி மாறிவிட்டார் : அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு!

Minister Kiran Rijiju spoke on Rahul Gandhi : நக்சலைட்டுகள், சித்தாந்த வாதிகளுடன் தொடர்பு என நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானவராக ராகுல் காந்தி உருவெடுத்துள்ளதாக கிரண் ரஜிஜு குற்றச்சாட்டு.

S Kavitha

Central Minister Kiran Rijiju spoke on Rahul Gandhi:

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக மாறிவிட்டார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரஜிஜூ கூறியுள்ளார்.

கிரண் ரஜிஜு குற்றச்சாட்டு:

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளையும் பிரிதிநிதித்துவப் படுத்துபவராக இருக்க வேண்டும்.

ஆனால், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பொறுப்பு இல்லாதவராகவும், சிறு பிள்ளைத்தனமாகவும் நடந்து கொள்கிறார் என்று மத்திய அமைச்சர் கிரன் ரஜிஜூ நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

பார்லி மன்றத்திற்கு வெளியே மக்களை துரோகிகள் என்று சொல்லும் ராகுல் காந்தி, அவையின் போது அவர்களுக்காக போராட்டம் நடத்தி நாடகமாடுகிறார்.

இதுவரை வெளிவராத புத்தகத்தை படிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது என்றார்.

இதுவரை பார்த்திராத தலைவர்:

மேலும், இந்திய வரலாற்றிலேயே இதுபோன்றதொரு எதிர்க்கட்சித் தலைவரை இதுவரை தான் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர்களே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை அனைவரும் கட்டாயமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ராகுல் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

பிரதமர் மோடி யாரையாவது சந்தித்திருந்தால் அதற்கான தகுந்த ஆதாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்து ஆதாரமே இல்லாமல் பிரதமர் மோடியின் பெயரை வலுக்கட்டாயமாக ராகுல் இழுப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தான் பார்லிமன்றத்தை முடக்கும் விதமாக காகிதங்களை வீசியெறிவது, பதாகைகளை ஏந்திக்கொண்டு இடையூறு செய்கிறது.

காங்கிரசால் பேசும் வாய்ப்பை இழக்கும் மற்ற எம்பிக்கள்:

எங்களால் திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட முடிகிறது.

ஆனால், காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் ராகுலின் அநாவசிய செயல்களால் மற்ற எம்பிக்களுக்கான பேசும் நேரம் குறைகிறது என்றும் தனது ஆதங்கத்தைக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்:

காங்கிரஸ் கட்சியினர் செய்வதையெல்லாம் சபாநாயகர் ஓம்பிர்லா பொறுமையாக கையாள்கிறார்.

இதுவே, சோம்நாத் சாட்டர்ஜியாக இருந்திருந்தால் காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரையும் இந்நேரம் சஸ்பெண்ட் செய்திருப்பார் என்றார்.

நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்:

இந்தியாவுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களுடன் ராகுல் காந்தி தொடர்பில் இருக்கிறார்.

நக்சலைட்டுகள், சித்தாந்த வாதிகளுடன் தொடர்பு என நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானவராக ராகுல் காந்தி உருவெடுத்துள்ளார் .

ராகுலைப் போலவே கட்சியும் மாறிவிட்டது:

ஒரு கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில், சொல்லிலும், செயலிலும் அனுபவமிக்க தலைவர்கள் இருந்தனர். ஆனால் இப்போது ராகுலைப்போலவே காங்கிரஸ் கட்சியும் மாறிவிட்டது.

ராகுல் காந்தி தொடர்ந்து மூன்று முறை தோல்வியைத் தழுவியவர்.

ஆனால் காங்கிரஸ் இன்னும் அவருடன் பயணிக்கிறது. ஆனால், பாஜக அப்படி இருக்காது என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரஜிஜு பேசியுள்ளார்.