சாமான்ய குடும்பத்தில் பிறந்தவர் :
CM MK Stalin Birthday Wishes To PM Narendra Modi : 1950ம் ஆண்டு குஜராத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி. இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நாட்டுப் பற்றுடன் படிப்படியாக முன்னேறியவர். கார்யகர்தாவாக தொடங்கிய அவரது பயணம் இன்று 140 கோடி மக்களின் பிரதமர் என்ற உயரிய நிலையை எட்டி இருக்கிறது.
நாட்டுப்பற்றே உயிர்மூச்சு:
மக்கள் மீதான அன்பு, நாட்டுப்பற்றில் தலைசிறந்த நரேந்திர மோடி, உலகத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார். அவர் இன்று தனது 75வது பிறந்தநாளை(Narendra Modi 75th Birthday) கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து :
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்(MK Stalin Wishes on PM Modi Birthday). நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து :
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ” நமது பிரதமருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்(Edappadi Palanisamy Wishes PM Modi). உங்கள் தொலைநோக்கு பார்வையுடைய தலைமை பண்பு, அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதிபாடு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க : "Modi 75" : 140 கோடி இந்தியரின் அடையாளம் : செல்வாக்கு மிக்க தலைவர்
ஓபிஎஸ் வாழ்த்து :
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛பிரதமர் மோடிக்கு அவரது 75வது பிறந்தநாளின் மகிழ்ச்சியான தருணத்தில்(OPS Wishes PM Modi), எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எப்போதும் போல் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எல்லா வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்று கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என கூறியுள்ளார்.
=====