வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை
மத்திய அரசால் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் "பிரதான் மந்திரி விகசித் பாரத் ரோஜ்கர் யோஜனா" (PM-VBRY) என்ற திட்டம் தொடங்கப்பட்டது .
இத்திட்டம் குறித்து ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஆற்றிய உரையின் போது, தொடக்கத்தில் "வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம்" (ELI Scheme) என்ற பெயரில் இதனை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
PM-VBRY' என மறுபெயரிடப்பட்ட இத்திட்டத்திற்கு . புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை 2 ஆண்டுகளுக்கு வழங்கவுள்ளது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஊக்கத்தொகை இதற்காக விடுவிக்கப்படவுள்ளது.திட்டத்தின் முதற்கட்டமாக , பயனாளிகளுக்கு பணம் செலுத்த இருக்கிறார் பிரதமர்
15 லட்சம் வேலைவாய்ப்பு மூலம் பயன்
இத்திட்டம் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
ரூ 15000 வரை ஊக்கத்தொகை
முறைசார் துறைகளில் (Formal Sector) முதன்முறையாக வேலைக்குச் சேர்ந்து, தங்களது முதல் பிஎஃப் (PF) கணக்கைத் தொடங்கியுள்ள தகுதி வாய்ந்த இளம் ஊழியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் தொகையானது நேரடியாக ஊழியர்களின் கணக்கில் இரண்டு தவணைகளாகப் பிரித்து செலுத்தப்படும்.