monsoon session of Parliament begins on the 20th of this month and will continue until August 13 AI generated
இந்தியா

ஜூலை 20 மழைக்கால கூட்டத்தொடர் : வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள் : முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக அரசு வியூகம்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

Kannan

மழைக்கால கூட்டத்தொடர்

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 முதல் ஆகஸ்டு 13 வரை

அதன்படி, வரும் 20ம் தேதி கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஆகஸ்டு 13ம் தேதி அதாவது சுதந்திர தினத்திற்கு முன்பு வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும்.

நான்கு வாரங்கள் நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

முக்கிய மசோதாக்கள் தாக்கல்

இத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, ஆகியவற்றை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

எதிர்க்கட்சிகள் வியூகம்

நீட் வினாத்தாள் கசிவு, பெட்ரோல், டீசல் விலையேற்றம், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை விவகாரம் ஆகியவற்றை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

திரிணாமூல், சிவசேனாவில் பிளவு

திரிணாமூல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் வெடித்து இருக்கும் மோதலுக்கு பிறகு நடைபெறும் கூட்டத் தொடர் இது. இந்தக்கட்சிகளை சேர்ந்த அதிருப்தியாளர்களின் செயல்பாடு எப்படி இருக்க போகிறது. பாஜக அரசுக்கு அவர்கள் எந்தவகையில் உதவ போகிறார்கள் என்பது இந்தக் கூட்டத்தோடரில் வெளிச்சத்துக்கு வரும்.

லோக்சபாவில் திரிணாமூல் எம்பிக்கள் 20 பேர், உத்தவ்வின் சிவசேனா எம்பிக்கள் 6 பேர், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு தர இருப்பது குறிப்பிடத்தக்கது.

NDA பலம் அதிகரிப்பு

நாடாளுமன்ற இரு அவைகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்து இருக்கும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

===================