ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சி
Mukesh Ambani Reliance Jio Invest 10 Lakhs Crore in AI : இந்தியாவின் முன்னணி பண்ணகாரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒரு நபர் என்றால் அது முகேஷ் அம்பானி தான். அவரின் ஜியோ நிறுவனம் இன்று உலகளவில் பிரபலமான ஒன்றாகும். குறிப்பாக இந்தியாவில் ஜியோ நிறுவனம் பல துறைகளில் காலடி பதித்து இருந்தாலும். ஜியோ என்றால் முதலில் நமக்கு நினைவிற்கு வருவது ஜியோ சிம் தான். ஆரம்ப காலகட்டத்தில், ஜியோ சிம் என்றால் பெரிதாக ஒரு தாக்கம் இல்லை, பிறகு டேட்டாவை இலவசம்(அன்லிமிடெட்) என்று வழங்கிய பின்பு தான் அதன் தாக்கம் மற்றும் ஜியோ சிம் இந்தியாவில் பெரும் ஆளுமை வகித்தது. பின்பு திரும்பு இடமெல்லாம், ஜியே சிம் மற்றும் இலவச டேட்டா என பட்தொட்டி முழுவதும் பரவியது.
இதைத்தொடர்ந்து, ஜியோ சிம் போல பட்டன் ஃபோன்களை அறிமுகம் செய்தது. நோக்கிய, மற்றும் பல சந்தை ஃபோன்களுக்கு இடையில், ஜியோ ஃபோன் என்றால்,பட்டன் ஃபோனிலே அதன் 4ஜி வசதி, கேமரா எனத்தொடர்ந்து குறைந்து விலையில், எளியோருக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வந்ததால், சிம் ஐ தொடர்ந்து பட்டன் போனின் பேச்சும் அதிகரித்து அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் ஆனது.
ஜியோ நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள் தொடர்ந்து உலக நாடுகள் நடத்தும் மாநாடுகள் மற்றும் பொருளாதார நிகழ்ச்சிகளை நடத்தியும், கலந்து கொண்டும் வந்தனர்.
முகேஷ் அம்பானி உரை
அதன் ஒரு பகுதியாக டில்லியில் நடந்த ஏஐ உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசினார். சிறந்த ஏஐ தொழில்நுட்ப செயலி இதுவரை உருவாக்கப்படவில்லை. சிறப்பான ஏஐ தொழில்நுட்ப சகாப்தத்தை உருவாக்க முடியும். ஒரு பக்கம் அதிக செலவு செய்து ஏஐ தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக இருக்கிறது. மற்றொரு பக்கம் குறைந்த செலவிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது.
ஜியோ இந்தியாவை சகாப்தத்துடன் இணைத்தது
ரிலையன்ஸ், ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி செயற்கை நுண்ணறிவு முதலீடு செய்யும். மொபைல் டேட்டாவில் செய்தது போல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம். இது முதலீடு அல்ல. வளர்ச்சி அடைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் மூலதனம். ஜியோ இந்தியாவை இணைய சகாப்தத்துடன் இணைத்தது.
மலிவு விலையில் ஏஐ தொழில்நுட்பத்தை அணுக ஜியோ வழிவகை செய்யும்
இப்போது அது ஏஐ தொழில்நுட்பத்திலும் நடக்கும். மக்கள் அனைவருக்கும், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்கும், சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு முயற்சியிலும் ஏஐ தொழில்நுட்பம் பயன்பாட்டை உருவாக்கும். நம்பகத்தன்மை வாய்ந்த, மலிவு விலையில் ஏஐ தொழில்நுட்பத்தை அணுக ஜியோ வழிவகை செய்யும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.