Mumbai Meteorological Centre issues 'Red Alert' for extremely heavy rainfall. google
இந்தியா

மும்பை கொட்டித் தீர்க்கும் மழை : அதி கனமழைக்கான ரெட் அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை...!

இதனைத் தொடர்ந்து, தானே மாவட்டம் மற்றும் கல்யாண்-டோம்பிவ்லி நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது

Rohini

மும்பை, தொடர் கனமழைக்கான ரெட் அலர்ட்

மும்பையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழையின் காரணமாக மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு ஜூலை 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கனமழை எதிரொலி , கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலி காரணமாக் தானே மாவட்டம் மற்றும் கல்யாண்-டோம்பிவ்லி நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது

மும்பை வானிலை மையம் எச்சரிக்கை

தீவிரமாக பெய்து வரும் மழையின் காரணமாக மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஜூலை 4-ஆம் தேதி அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை மும்பை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களுக்கான மழை எச்சரிக்கை

நாளை மறுநாள் அதற்கு அடுத்த நாட்களிலும் மழை பெய்யும் அதாவது 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் இந்தக் கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தொடரும் என்றும் இப்பகுதிகளில் பல இடங்களில் கனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை முன்னறிவிப்பு விடுத்துள்ளது

அதிகனமழை, அவசர கால உதவி எண்

இப்பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கான அவசரக்கால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று அறிவித்துள்ளார்

பாதிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதனை ஒட்டிய நகரங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் தேங்கிய மழை நீர் ,சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி உழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்

=============