இந்தியா

டெல்லி-மீரட் நமோ பாரத் ரயில் : சோதனை ஓட்டம் வெற்றி

டெல்லி-மீரட் இடையே இயக்கப்பட உள்ள நமோ பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

S Kavitha

முதல் நமோ பாரத் ரயில் ஒரு மணி நேரத்திற்குள் 82 கி.மீ. நீளமுள்ள பாதையில் மணிக்கு 160 கி.மீ. என்ற அதிகபட்ச இயக்க வேகத்தில் தடையின்றி ஓடியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சராய் காலே கான் மற்றும் மோடிபுரம் இடையே உள்ள ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நின்று, ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இலக்கை அடைந்தது.

நமோ பாரத் ரயிலின் சிறப்பம்சமாக உலகிலேயே முதல்முறையாக பயன்படுத்தப்படும் ஹைப்ரிட் சிக்னலிங் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

PSD எனும் பிளாட்ஃபார்ம் ஸ்க்ரீன் கதவுகள் மூலம் எந்தவித இடையூறும் இன்றி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த சோதனை ஓட்டத்தின் போது மீரட் மெட்ரோ ரயில்களும், நமோ பாரத் ரயில்களுடன் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன.

மேலும் டெல்லியில் நியூ அசோக் நகர் முதல் சராய் காலே கான் வரையிலான 4.5 கி.மீ.பிரிவிலும்,மீரட் தெற்கு முதல் மீரட்டில் உள்ல மோடிபுரம் வரையிலான சுமார் 23 கி.மீ. பிரிவிலும் நாமோ பாரத் ரயிலின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

மீரட் மற்றும் மோடிபுரம் டிப்போக்களுக்கு இடையிலான வழித்தடங்களிலும் சோதனை ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன.

நமோ பாரத் ரயில்கள் மூலம் மெட்ரோ சேவை வழங்கப்படுவது நாட்டிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.