National Handloom Day, Prime Minister called people of the country to support weavers  AI generated
இந்தியா

ஆக.7 தேசிய கைத்தறி தினம்: ’கைத்தறி பொருட்களை வாங்கி நெசவாளர்களை ஆதரியுங்க’: நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு!

தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி, கைத்தறி பொருட்களை வாங்கி நெசவாளர்களை ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருக்கிறார்.

Kannan

தேசிய கைத்தறி தினம்

On the occasion of National Handloom Day, Prime Minister Modi has called upon the people of the country to support weavers by purchasing handloom products.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை போற்றவும், இந்தியாவின் பாரம்பரிய கைத்தறித் துறையை மேம்படுத்தவும் இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது.

ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி இயக்கம்

1905ம் ஆண்டு இந்தநாளில் தான் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டு, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்று, நாட்டு மக்கள் ஒரே குரலில் ஆங்கிலேயருக்கு எதிராக தங்கள் திரண்டு நின்றனர்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு இந்தியரும் குறைந்தபட்சம் ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, நாட்டின் நெசவாளர் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கைத்தறி உடைகளை அணிய வேண்டும்

இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நுகர்வோர் தங்களுக்குப் பிடித்த கைத்தறி உடைகளை அணிந்து "Get Ready With Me" (GRWM) போன்ற டிரெண்டிங் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, இந்தியக் கைத்தறியின் பன்முகத்தன்மையை உலகறியச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதேசி இயக்கம்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1905 ஆகஸ்ட் 7 அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கமே இந்தியாவின் சுயசார்புக்கு (Atmanirbhar Bharat) அடித்தளமிட்டது என்பதை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

நெசவாளர்களுக்கு ஆதரவு

எளிய மற்றும் ஏழை நெசவாளர் குடும்பங்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தறிப் பொருட்களை வாங்குவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

கைத்தறி தினத்தை கொண்டாட வேண்டும்

சமீபத்தில் கொண்டாடப்பட்ட நட்பு தினத்தைப் போன்றே, தேசிய கைத்தறி தினத்தையும் மக்கள் அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழிப்புணர்வு ஹேஷ்டேக்

சமூக வலைத்தளங்களில் கைத்தறிப் பொருட்கள் குறித்த வீடியோக்களைப் பகிரும்போது #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

===============