National Pharmaceutical Pricing Authority reduced prices of 30 types of medicines, including diabetes google
இந்தியா

”சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி” : 30 வகையான மருந்துகளின் விலை குறைப்பு, உச்சவரம்பு நிர்ணயம்...!

சர்க்கரை நோய் உட்பட 30 வகையான மருந்துகளின் விலையை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் குறைத்து இருக்கிறது.

Kannan

நாள்பட்ட நோய்களுக்கான மருந்து

The National Pharmaceutical Pricing Authority (NPPA) recently capped the Maximum Retail Prices (MRP) for 30 essential drug formulations : நாள்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், சர்க்கரை நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

சாமான்ய மக்களுக்கு சுமை

சாமான்ய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் இதற்காக தனித்தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. இவற்றின் விலையும் அதிகமாக இருப்பதால், நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

உச்சவரம்பு விலை நிர்ணயம்

இந்தநிலையில், சர்க்கரை நோய் உட்பட மொத்தம் 30 வகையான மருந்துகளின் விலைக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்

மருந்துகள் விலைக்கு கட்டுப்பாடு

புதிய விலை உச்சவரம்பு கட்டுப்பாடு முக்கியமாக நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளின் மீது விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் மேலாண்மைக்கான மருந்துகள், இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கூட்டு மருந்துகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர பட்ஜெட்டில் சேமிப்பு

இதற்கான அறிவிப்பு பொதுமக்களுக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கம், நீண்டகாலம் மருந்து உட்கொள்பவர்களின் மாதாந்திர மருந்து பட்ஜெட்டைக் குறைப்பதுதான் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக, அதிக அளவில் விற்கப்படும் கூட்டு மருந்துகளின் (Combination Drugs) விலையை ஒழுங்குபடுத்தி, மருந்து நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை தடுக்க இந்த உச்சவரம்பு வழிவகுக்கும்.

வைட்டமின் சத்து மாத்திரைகள், பெண்களின் உடல்நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு பயன்படும் மருந்துகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் பயன்படுத்தும் கேப்ஸ்யூல்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சத்து மாத்திரைகளை விலை குறைப்பு

இதேபோல வைட்டமின் சத்து மாத்திரைகள், பெண்களின் உடல்நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு பயன்படும் மருந்துகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் பயன்படுத்தும் கேப்ஸ்யூல்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியை குறைங்க

நோயாளிகளின் மருத்துவச் செலவை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், வெறும் விலை உச்சவரம்போடு நிறுத்திக் கொள்ளாமல், நாள்பட்ட நோய்களுக்கான அனைத்து அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

===========