வந்தே மாதரம் பாடலுக்கு முக்கியத்துவம் :
மத்திய அரசு ஒரு முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது அது என்னவென்றால் இனி இந்தியாவில் யாரேனும் வந்தே மாதரம் பாடலை அவமதித்தல் அவர்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கபடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
இரு அவைகளிலும் நிறைவேற்றம் :
கடந்த ஜூலை மாதம் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது பின்னர் இது இரண்டு அவைகளிலும் பல விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த சட்டம் அமலுக்கு வந்தது .
இந்தியாவில் இதுவரை நடைமுறையில் இருந்த 'தேசிய மாண்புகள் அவமதிப்பு தடுப்பு சட்டம், 1971' என்ற சட்டத்தின் கீழ் தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் இந்திய வரைபடத்தை அவமதிப்பது மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தத்தின் மூலம், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலும் இந்தச் சட்டப் பாதுகாப்பின் கீழ் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து தண்டனை :
தேசிய கீதம் மற்றும் தேசிய கோடிக்கு எப்படி முக்கியத்துவம் அளித்து அதனை அவமதிப்போருக்கு கடும் தண்டனை வழங்க போடுகிறோதோ அதே போல இனி வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கும் கடும் தண்டனை வழங்கப்படும்.
ஆனால் தண்டனை குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து அந்த அந்த நீதிமன்றங்களும் காவல் துறையும் முடிவு செய்யும் .