NDA leads in 160 seats in Bihar assembly elections, forms government there again 
இந்தியா

மீண்டும் NDA ஆட்சி : 160 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் படுதோல்வி

Bihar Assembly Election 2025 Results Update in Tamil : பிகார் சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் NDA, மீண்டும் அங்கு ஆட்சி அமைக்கிறது.

Kannan

பிகார் சட்டமன்ற தேர்தல்

Bihar Assembly Election 2025 Results Update in Tamil : 243 உறுப்பினர்களை கொண்ட பிகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளும், 2ம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளும் வாக்குப்பதிவை எதிர்கொண்டன. முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது.

என்டிஏ vs மகாகத்பந்தன்

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியும், தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியும் தேர்தலை எதிர்கொண்டன. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் முதல்முறையாக தேர்தலை சந்தித்தது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

காலை 10.30 மணி நிலவரத்தை பார்க்கலாம் :

  • மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை - 243

  • தேஜ கூட்டணி ( பாஜக ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் கட்சி) - 168

  • பாஜக 73, ஐக்கிய ஜனதா தளம் 74, லோக் ஜன்சக்தி 16, மற்றவை 5

  • மஹாகத்பந்தன் கூட்டணி ( ஆர்ஜேடி + காங்கிரஸ் ) - 58

  • ஆர்ஜேடி 48, காங்கிரஸ் 14, மற்றவை 6

கருத்துக் கணிப்புகள் - பலித்தன

வாக்குப்பதிவுக்கு முந்தைய தேர்தல் கருத்துக் கணிப்புகளும், தேர்தல் நடந்த பிறகு எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறின. இந்த கணிப்பின் படியே தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு

தற்போதைய நிலவரப்படி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார். 2005 முதல் முதல்வராக இருக்கும் அவர், இந்த முறையும் 5 ஆண்டுகள் நீடித்தால், 25 ஆண்டுகள் முதல்வர், அதுவும் தொடர்ச்சியாக என்ற சாதனையை படைப்பார்.

==================