மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இதற்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ‘சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்’ ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
லட்சக் கணக்கானோர் எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்விற்காக (இளங்கலை மருத்துவப் படிப்பு) தயாராகி வருகின்றனர்.
மே 3ம் தேதி நீட் தேர்வு
மே 3ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் கசிவு போன்ற தவறான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹால் டிக்கெட் வெளியீடு
இதனைத் தொடர்ந்து, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.
இணைய தளத்தில் பதிவிறக்கம்
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியானது. நீட் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
நீட் நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இதற்காக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகளுடன் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு முக்கிய விவரங்கள்
* இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (NCERT 11 மற்றும் 12 ஆம் வகுப்பு).
* மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 200 கொள்குறி வகை வினாக்கள் (180 வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்).
* எதிர்மறை மதிப்பெண் (Negative Marking): தவறான பதிலுக்கு
மதிப்பெண் குறைக்கப்படும்.
* 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரித் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
============