NEET Re-Exam 2026 Security Updates Tamil | NTA Telegram Ban & Air Force Security
ஜூன் 21 - ல் நீட் மறுதேர்வு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத்தொடர்ந்து வரும் ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இம்முறை மீண்டும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தேசிய தேர்வுகள் முகமை ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.
NTA அதிரடி நடவடிக்கைகள்
அந்தவகையில் NTA முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக பாதுகாப்பு பணியில் ஐந்து லட்சம் இராணுவ வீரர்களை இறக்கியுள்ளது.
முன்னதாக வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், முறைகேடுகளை முறியடிக்கவும் மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
டெலிகிராம் செயலிக்கு தடை
கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வின் போது, சிலர் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி வினாத்தாள்களைக் கசியவிட்டது விசாரணையில் அம்பலமானது.
ஜூன் 22 வரை இந்தியாவில் தடை
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 22-ம் தேதி வரை இந்தியா முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
ரகசிய இடத்தில் ஊழியர்கள் தனிமைப்படுத்தல்
நீட் வினாத்தாள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் ஜூன் 21-ம் தேதி வரை வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இல்லாமல் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் யாரும் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ஒரு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் செல்போன், லேப்டாப் மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இணைய வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை மற்றும் துப்பாக்கி ஏந்திய ராணுவப் பாதுகாப்பு
நீட் தேர்வு வரலாற்றிலேயே முதல் முறையாக வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, வினாத்தாள் உற்பத்தி மையங்களில் இருந்து புறப்படுவது முதற்கொண்டு இறுதி வரை மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் இவை கொண்டு செல்லப்படும்.
551 நகரங்களில் பாதுகாப்பு
மேலும், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய முதன்மை மையங்களில் இருந்து தேர்வு நடைபெறும் 551 நகரங்களுக்கும் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் போது, CISF மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய மத்தியப் படைகளின் சிறப்புப் பிரிவு வீரர்கள் துப்பாக்கி ஏந்திய தீவிரப் பாதுகாப்பை வழங்க உள்ளனர்.
5 லட்சம் பணியாளர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு.
தேர்வு முறையை முழுமையாகக் கண்காணிக்கப் பல அடுக்கு பாதுகாப்பு உள்கட்டமைப்பை NTA உருவாக்கியுள்ளது. இதற்காகத் தேர்வு மையங்கள் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
ஆள்மாறாட்டத்தை தடுக்க ஏற்பாடு
தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு, முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகள் அனைத்தும் உடனுக்குடன் நேரலையாகக் கண்காணிக்கும் சிசிடிவி வசதியோடு ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகள் மற்றும் அடையாள ஆவணங்கள் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம் – NTA எச்சரிக்கை
முக்கியமாக நீட் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் என்று NTA திட்டவட்டமாக கேட்டுக்கொண்டுள்ளது.
வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை
தேர்வுக்கு முன்பாக யாரும் வினாத்தாளைப் பெற முடியாது என்றும், தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் அல்லது மோசடி செய்ய முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
======