நாளை நடைப்பெறும் நீட் மறுத்தேர்வு
வினாத்தாள் கசிவு காரணமாக நாடும் முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்ப்ட்ட நிலையில் மறுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.
இதனையொட்டி குளறுபடிகள் ஏதும் நடக்காதவாறு இன்று ஒத்திகையை மேற்கொள்வதாக தேசிய தேர்வுகள் முகமையான் என்டிஏ அறிவித்துள்ளது
வினாத்தாள் கசிவை தடுக்க டெலிகிராம் செயலி முடக்கம்
வினாத்தாள் கசிவை தடுக்க , வினாத்தாள்களைக் கொண்டு செல்ல இந்திய விமானப் படை சேவையைப் பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் தேசிய தேர்வுகள் முகமை ஈடுபட்டு வருகிறது
கடந்த நீட் தேர்வின் போது ஒரு கும்பல் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி வினாத்தாள்களைக் கசியவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதான் எதிரொலி காரணமாக அசம்பாவிதம் ஏதும் நிகழாதவாறு தடுக்க ஜூன் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
தேர்வை சுமுகமாக நடத்தவும் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார். நீட் மறு தேர்வு நாளை நடைபெறும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் , தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 307 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,42,489 மாணவர்கள் நீட் மறுதேர்வு எழுதுகின்றன்ர் அவர்களுக்கு எந்த இடைறும் நடக்காதவாறு கண்காணிக்க உத்தரவானது அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
தீவிர பாதுகாப்பில் சிஆர்பிஎஃப் வீரர்கள்
குறிப்பாக ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய முதன்மை மையங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் 551 நகரங்களின் மையங்கள் வரையிலான ஒட்டுமொத்த பயணத்திலும் சிஐஎஸ்எஃப் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரமான பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்ய, என்டிஏ பல அடுக்கு பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தேர்வு மையங்கள் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
நீட் மறுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிகாக தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . சென்னையில் புறநகர் ரயில்கள் வார அட்டவணையின் படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது , மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் நீட் எழுதும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீட் மறுத்தேர்வு : நிமிடத்தை அதிகரித்த என்டிஏ
நீட் மறுத்தேர்வில் சில மாற்றங்களை செய்து தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது , அதனபடி தேர்வு கால அளவு 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு 5.15 மணிக்கு நிறைவடையும். தேர்வு தொடங்கும் போதும், முடியும்போதும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது உள்ளிட்ட நடைமுறைகளும் இதில் அடங்கும்.
=====================