NEET results now released, 11,21,000 candidates across the country have qualified AI generated
இந்தியா

"நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு" : 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி! : மாணவிகள் 58% தேர்ச்சி பெற்று சாதனை...!

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், நாடு முழுவதும் 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

Kannan

நீட் நுழைவுத் தேர்வு

எம்பிபிஎஸ் எனப்படும் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர நீட் எனப்படும் தகுதி தேர்வு ஆண்டுதொறும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வினை நடத்துகிறது.

நீட் வினாத்தாள் வெளியானது

அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூன் 3ம் தேதி நடத்தப்பட்டது. இணைய தளத்தில் வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளுடன் ஒத்துப் போவது உறுதி செய்யப்பட்டதால், தேர்வு ரத்து செய்யப்[படுவதாக அறிவிக்கப்பட்டது.

நீட் மறுதேர்வு

இதையடுத்து, நீட்மறுதேர்வு கடந்த ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5, 400க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.79 லட்சம் மாணாக்காரர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 20 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தேர்வு எழுதியவர்களில் 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

தேர்வர்கள் தங்களது மதிப்பெண் அட்டையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சாதித்த மாணவிகள்

தேர்வு எழுதிய மாணவிகளில் 58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தி இருக்கிறார்கள்.

இரண்டு பேர் முதலிடம்

இத்தேர்வில் பஞ்சாபின் ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவின் பன்ஷுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

19 பேர் 700க்கும் அதிகமான மதிப்பெண்

19 மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களையும், 138 மாணவர்கள் 690-க்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் உத்தர பிரதேசம்

மாநில அளவில் உத்தரப் பிரதேசம் 1.7 லட்சம் தேர்ச்சிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 705 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற டாப் 17 மாணவர்கள் தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

பிரிவு வாரியாக தேர்ச்சி

பிரிவு வாரியாக, ஓபிசி பிரிவில் 5.12 லட்சம் பேரும், பொதுப் பிரிவில் 2.91 லட்சம் பேரும், எஸ்சி பிரிவில் 1.59 லட்சம் பேரும், எஸ்டி பிரிவில் 63,716 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மருத்துவக் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை செயல்முறைகள் திட்டமிட்டபடி தடையின்றி நடப்பதை உறுதி செய்ய இம்முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை

போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது மருத்துவ இடங்களை வாங்கித் தருவதாகக் கூறும் மோசடி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 011-40759000 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

=================