NEET UG Entrance Exam for Undergraduate Medical Studies for the academic year 2026The National Testing Agency (NTA) has announced that it will be held on May 3, 2026  google
இந்தியா

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு : தேர்வு தேதி வெளியானது

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதியை தேசிய தேர்வுகள் முகமை வெளியிடப்பட்டுள்ளது . தேர்விற்கு மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Rohini

NTA அறிவிப்பு

தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பின்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும் என்றும் மார்ச் 8ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு கட்டணம்

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ₹1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ₹1600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கு ₹1000.

இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எந்தெந்த மொழிகளில் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

தேர்வு எப்போது

தேர்வுக்கு இணையவழியில் குறிப்பிட்டது போல பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வானது வருகிற மே 3ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்புகளை சரியாக பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

=============