Netherlands hands over Chola Anai Mangalam copper plates to PM Modi, adding pride to Tamil Nadu google
இந்தியா

ஆனைமங்கலம் செப்பேடுகள் : ”பௌத்தத்தை போற்றிய ராஜராஜ, ராஜேந்திர சோழர்கள்” : பிரதமர் மோடியிடம் ஒப்படைத்த நெதர்லாந்து...

சோழர்களின் ஆனைமங்கலம் செப்பேடுகளை பிரதமர் மோடியிடம் நெதர்லாந்து ஒப்படைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறது

Kannan

சோழர் கால செப்பேடுகள்

தமிழகத்தின் முவேந்தர்கள் காலத்து எத்தனையோ செப்பேடுகள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், சோழர் காலத்து ஆனைமங்கம் செப்பேடுகள் பற்றி பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. காரணம் இந்த செப்பேடு இந்தியாவில் இல்லை.

ஆனைமங்கலம் செப்பேடு

450 ஆண்டு கால சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்று அடிப்படையில் உருவான இந்த செப்பேடு இங்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

முதலாம் ராஜ ராஜேந்திர சோழன் என்பவரால் சோழ சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டது. கிபி 985 முதல் 1014 வரை நாகப்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆட்சி செய்தனர். சுமார் 16 சோழ மன்னர்கள் 450 ஆண்டு ஆட்சியில் கோலோச்சினர்.

முடிவுக்கு வந்த சோழர் சாம்ராஜ்ஜியம்

கிபி 13 ஆம் நூற்றாண்டில் சுந்தர பண்டியன் படையெடுப்பின் மூலம் சோழர்களின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது புலிக்கொடி இறங்கி வில் அம்பு கொடி பறக்க தொடங்கியது.

21 செப்பேடுகள்

ராஜ ராஜேந்திரன் சோழன் ஆட்சி காலத்தில் கல்வி கலாச்சாரம் அரசியல் கட்டிடக்கலை பொருளாதாரம் ஆட்சியமைப்பு இவை பற்றிய குறிப்புகள் செப்பேடுகளில் இடம் பெற்றன.

மொத்தம் 21 செப்பேடுகள் உள்ளன. மொத்த எடை 30 கிலோ. இவை அனைத்தையும் ஒரு கனமான வளையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

சமஸ்கிருதம், தமிழில் செப்பேடுகள்

வளையத்தில் முன் பகுதியில் சோழர் காலம் முத்திரை பதிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு செப்பேடுகள் 14 இன்ச் நீளமும் ஐந்து இன்ச் அகலம் கொண்டது.

முதல் ஐந்து செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும் மீதி பதினாறு செப்பேடுகள் தமிழ் எழுத்துக்களிலும் உள்ளன.

நெதர்லாந்து சென்ற செப்பேடுகள்

டச்சு கம்பெனி மூலம் இந்தியாவுக்கு வந்த நெதர்லாந்து நாட்டினர் சுமார் 200 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தினர். அந்தக் காலக் கட்டத்தில் தான்,

ஆனைமங்கலம் செப்பேடுகள் அனைத்தும் பிளாரன்ஸ் கேம்பர் என்பவர் மூலம் 1867ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எடுத்துச் செலலப்பட்டன.

வெளிநாடுகளின் அரிய பொக்கிஷங்கள்

நெதர்லாந்தின் லீ டைன் பல்கலைக் கழகத்தில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. நெதர்லாந்தில் வெளிநாடுகளைச் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்கள் உள்ளன.

அந்தந்த நாடுகள் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ள நெதர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

பௌத்த விகாரங்களுக்கு தானம்

ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden Copper Plates) 11ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள பௌத்த விகாரத்திற்கு ஆனைமங்கலம் கிராமத்தைத் தானமாக வழங்கியதை விவரிக்கும் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும்.

சோழர்களின் மத நல்லிணக்கம்

சோழர் கால நிர்வாகம் மற்றும் சமய நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கின்றன.இந்தநிலையில் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி நெதர்லாந்து சென்றார்.

பிரதமர் மோடியிடம் அளிப்பு

அவரிடம் ஆனைமங்கலம் செப்பேடுகளை அந்நாட்டு அரசு ஒப்படைத்துள்ளது. அவை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன.

---------------------------