இந்தியாவில் வாழும் தலாய் லாமா :
India on New Dalai Lama Successor: புத்த மதத் தலைவராக இருப்பவர் 14வது தலாய் லாமா. இவர் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக சிறு வயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகிறார். அவர் 90வது வயதை எட்டுவதால், விரைவில் தனது வாரிசை அறிவிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், 'தலாய் லாமாவின் மறுபிறவியை தன்னுடைய 'காடன் போட்ராங்' அறக்கட்டளை மட்டுமே தேர்வு செய்யும். தனக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும். இந்த விவகாரத்தில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை,' என்று குறிப்பிட்டிருந்தார்.
சீண்டிப் பார்க்கும் சீனா :
தலாய் லாமாவை(Dalai Lama Selection) தேர்ந்தெடுக்க சீனாவுக்கு அதிகாரமில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இதை ஏற்க மறுக்கும் சீனா, ' புதிதாக தேர்வு செய்யப்படும் தலாய் லாமாவை அங்கீகரிப்பதில் சீன அரசின் ஒப்புதலை பெற்று கொள்கைகளை பின்பற்ற வேண்டும்,' என்று எச்சரித்துள்ளது.
சீனாவுக்கு இந்தியா பதிலடி :
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய வாரிசை புத்த மதத் தலைவர் தலாய் லாமாவினால்(14th Dalai Lama) மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிக்கையில், ”தலாய் லாமாவின் முடிவு திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் மிகவும் முக்கியமானது. அவரது வாரிசை தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கே முழுமையாக உள்ளது. இது முற்றிலும் மத நிகழ்வு,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சீனா தேவையின்றி தலையீடு செய்ய முயல்வது தெரிகிறது. இந்தியாவின் முழு ஆதரவோடு, புதிய தலாய் லாமாவை தற்போதைய தலாய் லாமா, சுதந்திரமாக தேர்வு செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை.
======