New Income Tax Act 2025, which provides tax exemption to those earning up to Rs 1 lakh, will come into effect April 1, 2026  INCOME TAX ACT, INDIA
இந்தியா

புது வருமானவரி சட்டம் ஏப்ரலில் அமல்: 1 லட்சம் சம்பளம், வரி இல்லை

New Income Tax Act 2025 To Take Effect From April 1 2026 : 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கும், புது வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Kannan

வருமானவரி சட்டம்

New Income Tax Act 2025 To Take Effect From April 1 2026 : இந்தியாவில் தற்போது நடைமுறையுல் உள்ள வருமானவரி சட்டம், 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வரும் வகையிலும், பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்தும் பொருட்டும் புதிய வருமானவரி மசோதா 2025, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.

புது வருமானவரி சட்டம்

இந்த புது வருமான வரிசட்டம் அடுத்த ஆண்டு ( அதாவது 2026 ) ஏப்ரல் 1ம் தேதி முதல்(New Income Tax Act 2025 To Take Effect From April 1) அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் மிகவும் எளிமையாகவும், சாமானியர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேவையற்ற பிரிவுகள் நீக்கம்

பழைய வருமானவரி சட்டத்தில் இருந்த தேவையற்ற பிரிவுகள் மற்றும் பழமையான கலைச்சொற்கள் குறைக்கப்பட்டு, மொத்த சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819லிருந்து 536 ஆகவும், அத்தியாயங்கள் 47-லிருந்து 23 ஆக குறைப்பட்டு இருக்கின்றன. மொத்த வார்த்தை எண்ணிக்கை 5.12 லட்சத்திலிருந்து 2.6 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வரி குழப்பங்கள் நீக்கம்

64 ஆண்டுகள் பழமையான வருமானவரி சட்டத்தற்கு பதிலாக கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய வருமான வரிச் சட்டத்தில், எளிமையாக்கப்பட்ட ஐ.டி.ஆர் படிவங்கள் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கும். எனவே, வரி செலுத்துவோர் மத்தியில் ஏற்படும் குழப்பங்கள் முழுமையாக தவிர்க்கப்படும்

ரூ.12 லட்சம் வரை வரி கிடையாது

புதிய சட்டப்படி, ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அதாவது மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் சாமானிய மக்கள் இனிமேல் அரசுக்கு வருமான வரி கட்டத் தேவையில்லை.

புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு அங்கமாக, ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 4-க்கு பதிலாக 2 ஆக குறைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது.

மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் சிகரெட், பான்மசாலா, புகையிலை பொருட்களின் மீது ஜிஎஸ்டியுடன் கூடுதல் வரி விதிக்க புதிய சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.

எளிமையாகும் சுங்க வரிகள்

சுங்க வரிகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருந்தா. எனவே விமானம் மற்றும் கப்பலில் வரும் சரக்குகளுக்கு சுங்க வரியும் இனி எளிமையாகும்.

=========================