புதிய தொழிலாளர் சட்டம்
New Labour Law Code 2025 in Tamil : புதிய தொழிலாளர் சட்டம் என்பது, ஜிஎஸ்டி வரி சீர்திருத்த அமலுக்கு வந்த பிறகு நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய சீர்திருத்தமாகும். மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் வணிகத்தை உலக சந்தையில் பெரிதும் உயர்த்தும் என்பதை உறுதி செய்திருக்கிறது. 29 தனித்தனியான சட்டங்களை 4 முக்கிய குறியீடுகளாக ஒருங்கிணைத்தது தொழிலும், தொழிலாளர்களும் பயனடையும் முன்னேற்றமான மாற்றமாகும்.
தொழிலாளர்களுக்கு அதிக பயன்கள்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் இரண்டு அடுக்குகள் என்ற மிகப்பெரிய மாற்றத்தை தீபாவளி பரிசாக கொடுத்த மத்திய அரசு, அதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலைக் குறைப்புக்கு வழி வகுத்தது. அதன் அடுத்தகட்டமாக தொழிலாளர் நலனை பெரிய அளவில் மேம்படுத்தும் வகையில், புதிய தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தம் மூலம், 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு எளிய, நவீன குறியீடுகளாக ஒருங்கிணைப்படுகின்றன. இதனால்,தொழிலாளர் கட்டமைப்பை நவீனமயமாக்க உறுதியான நடவடிக்கையை எடுக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, ஊதியக் குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, சமூகப் பாதுகாப்பு குறியீடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (OSHWC) குறியீடு ஆகியவை ஒன்றாகும் போது பணியிட பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
நான்கு குறியீடுகள்
நான்கு குறியீடுகள் என்ன? என்பதை பார்க்கலாம். ஊதியக் குறியீடு, ஊதியச் சட்டங்களை நெறிப்படுத்துகிறது, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை நிறுவுகிறது, கட்டணங்களை கட்டுப்படுத்தி, போனஸ் மற்றும் ஊதிய வரையறைகளை தெளிவாக்குகிறது.
தொழிலாளர் உரிமை பாதுகாப்பு
தொழில்துறை உறவுகள் குறியீடு, என்பது, தொழிற்சங்கங்களுக்கு நிலையான ஆணைகள் வழங்குகிறது. இதன் மூலம், பணிநீக்கம், நிறுவனத்தை மூடுதல் தொடர்பான சட்டங்களை நெறிப்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.
சமூகப் பாதுகாப்பு குறியீடு, பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் பணி, வேலை பார்க்கும் இடம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களைக் கொண்டு வருவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வலையை விரிவுபடுத்துகிறது.
OSHWC குறியீடு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் விதிமுறைகளை நவீனமயமாக்கி, தரத்தை உயர்த்துகிறது. வளர்ச்சிக்கும், தொழிலாளர்களுக்கு ஆதரவான சீர்திருத்தங்கள் எளிமையான விதிகள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன.
நான்கு தெளிவான குறியீடுகள்
இதற்கு முன்பு 29 வெவ்வேறு தொழிலாளர் சட்டங்கள் இருந்தன. இவை ஒருங்கிணைக்கப்பட்டு 4 தெளிவான குறியீடுகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்த நடவடிக்கை காரணமாக முதலாளிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு எளிதான இணக்கம் ஏற்படும். தொழிலாளர்களுக்கு உலகளாவிய சமூகப் பாதுகாப்பு கிடைக்கும்.
சிறந்த, சரியான நேரத்தில் ஊதியம்
சமூகப் பாதுகாப்பு குறியீட்டில் டெலிவரி செய்வோர், கேப் ஓட்டுநர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்கள் போன்ற சாலையோர தொழிலாளர்களை கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வூதியம், சுகாதாரப் பலன்கள், காப்பீடு மற்றும் பிற நலத்திட்டங்கள் முறையாக கிடைக்கும். சிறந்த ஊதியம், நியாயமான ஊதிய கட்டமைப்பு, குறைந்தபட்ச ஊதியம், சரியான நேரத்தில் சம்பளம், போனஸ் ஆகியவை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு
இதன் மூலம், தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம், சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்கிறது. அதேசமயம், வணிகங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பணியிடம் நிலையானதாக, முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். பாதுகாப்பான பணியிடங்கள் தொழிலாளர்கள் பக்கம் இருக்கும். குறைந்த ஆபத்துள்ள துறைகள் எளிமையான ஆய்வுகளையும், அதிக ஆபத்து தொழில்கள் கூடுதல் கவனத்துடன் ஆய்வுகளை எதிர்கொள்ளும்.
இந்தியாவில் முக்கியமான சீர்திருத்தம்
தொழிலாளர்கள் நலனுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே, சட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும், மத்திய அரசின் நான்கு குறியீடுகள், இந்திய பணியிடங்களை பாதுகாப்பானதாகவும், ஊதியங்களை நியாயமானதாகவும், வணிகங்களை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தான், இந்தக் குறியீடுகள் நவீன இந்தியாவின் மிக முக்கியமான பணியாளர் சீர்திருத்தங்களில் ஒன்றாக தனித்து நிற்கின்றன.
புதிய சட்டத்தின்கீழ் தொழிலாளர்களுக்கு நலன் மற்றும் சலுகைகளை வழங்க நிறுவனங்களுக்கு செலவு அதிகரிக்கும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டு இருக்கிறது.
===