New Ration Card Rules 2026 Money instead of rice and wheat at ration shops - Modi government's new scheme! Google
இந்தியா

ரேஷனில் அரிசி, கோதுமைக்கு பதில் பணம் : மோடி அரசின் புதிய திட்டம்!

New Ration Card Rules 2026 : ரேஷன் விநியோக முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில், ரேஷன் பொருட்களை பெற விரும்பாதவர்கள் பணமாக மாற்றி கொள்ளலாம் என்கிற வகையில் புதிய முறை கொண்டு வரப்படுகிறது.

Baala Murugan

ரேஷன் எனும் நியாய விலைக்கடை

New Ration Card Rules 2026 : ரேஷன் கடை என்பதின் தமிழ் வழக்கு சொல் நியாய விலைக்கடை என்பது தான். அதில் ஜனநாயக உரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பல பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன்முறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

மோடி அரசின் புதிய ரேஷன் திட்டம்

இந்நிலையில், மோடி அரசின் புதிய ரேஷன் திட்டம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை அறிவித்துள்ளது. அதாவது, அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, இனி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியத் தொகையை அனுப்ப மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

விரைவில் புதிய திட்டம்

இந்த வசதி எப்போது முதல் கிடைக்கும்? இந்த புதிய முறையில், உணவுப் பொருட்களைப் பெறுவதா அல்லது அதற்கு சமமான பணத்தை வங்கிக் கணக்கில் பெறுவதா என்பதை ரேஷன் அட்டைதாரர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

வவுச்சர் மூலம் உணவுப்பொருட்கள்

ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம் இந்த புதிய அமைப்பின் அடிப்படை தொழில்நுட்பம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) உதவியுடன் 'இ-ரூபாய்' என்ற சிறப்பு டிஜிட்டல் வவுச்சரை அரசு உருவாக்கியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மாதாந்திர இ-வவுச்சர் அனுப்பப்படும். குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை மாறுபடும். இந்த வவுச்சர் மூலம் உணவுப் பொருட்களைப் பெறலாம்.

புதிய இலக்குகளை அடையவே இந்த முயற்சி

புதிய ரேஷன் விதிமுறை ஆனால், ஒரு வாடிக்கையாளருக்கு ரேஷன் பொருட்கள் தேவையில்லை என்றால், அவர் அந்த வவுச்சரை பணமாக மாற்றி நேரடியாக தனது வங்கிக் கணக்கில் செலுத்திக் கொள்ளலாம்.

இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்றால்,

1. செலவைக் கட்டுப்படுத்துதல்.

2. போலி அட்டைகளை ஒழித்தல்.

3. ஊழலைத் தடுத்தல்.

நேரடி பணப் பரிமாற்றம் (DBT) மூலம் இந்த இலக்குகளை அடைய அரசு முயல்கிறது.

பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செயலாக்கம்

ரேஷன் பண உதவி தற்போது சண்டிகர், புதுச்சேரி, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் இந்த DBT திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு

இதன் மூலம் ₹113 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படலாம். ஆனால், இது அமலுக்கு வந்தால் ரேஷன் கடை டீலர்கள் வேலை இழப்பார்கள் என அகில இந்திய நியாய விலைக் கடை டீலர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிய திட்டம் எந்த அளவுக்கு பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என்ற கேள்வி எழும் நிலையில், இது வெற்றிகரமாக செயல்பட்டால், தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் நடைமுறை படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.