Nitish Kumar, who is Chief Minister of Bihar for 10th time Check How Many Times Bihar CM Nitish Kumar Google
இந்தியா

10வது முறை முதல்வராகிறார் : பிகாரின் "Super Star" நிதிஷ்குமார்

Bihar CM Nitish Kumar Will Take Oath 10th Time : பிகாரில் 10வது முறையாக முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார், நாட்டில் நீண்ட காலம் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற சாதனையை வசப்படுத்துகிறார்.

Kannan

சாதனை நாயகன் ‘நிதிஷ் குமார்’

Bihar CM Nitish Kumar Will Take Oath 10th Time : பிகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏவுக்கு கிடைத்து இருக்கும் அபார வெற்றி, கூட்டணியின் நாயகன் நிதிஷ்குமாரின் கரத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது. அவரது செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்கான திட்டங்கள், மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்து இருக்கிறது.

20 ஆண்டுகளாக முதலமைச்சர்

பாஜக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் 85 தொகுதிகளில் வாகை சூடி சாதித்து இருக்கிறது. 20 ஆண்டுகளாக பிகார் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார், தனது வலிமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

2000ல் முதல்வரானார் நிதிஷ்குமார்

முதன்முதலாக 2000வது ஆண்டு மார்ச் 3ம் தேதி பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு நவம்பர் 2005 தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்வர் ஆனார்.

தேர்தல்களில் தொடர் வெற்றி

அதைத்தொடர்ந்து பிகாரில் 2010ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை வசப்படுத்திய நிதிஷ்குமார், 3வது முறை முதல்வரானார். 2014ல் பாஜகவிடம் இருந்து நிதிஷ் பிரிந்தார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்த அவர் 2015ல் மகத்தான வெற்றி பெற்றார்.

இதில், முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ல், அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் என்டிஏ.வுக்கு திரும்பினார். 2020-ல் மறுபடியும் முதல்வரான நிதிஷ்குமார், 2022-ல் மீண்டும் என்டிஏ.வில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸின் மெகா கூட்டணி சார்பில் முதல்வரானார்.

9 முறை முதல்வராக நிதிஷ் குமார்

மே 24, 2024 முதல் 278 நாட்கள் ஜேடியு ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். ஜனவரி 2024-ல், நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் இணைந்து, 9வது முறையாக முதல்வரானார். மாறிமாறி கூட்டணி என்ற விமர்சனங்கள் நிதிஷ் குமார் மீது வைக்கப்பட்டாலும், இந்த முறையும் அபார வெற்றியை என்டிஏ கூட்டணிக்கு பெற்றுத் தந்து இருக்கிறார் நிதிஷ் . பிரதமர் மோடியுடனான இவரது நெருக்கம் கூட்டணியை வலுப்படுத்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

10வது முறை முதல்வராகும் நிதிஷ்

தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றதால் 10-வது முறையாக முதல்வர்(How Many Times Bihar CM Nitish Kumar) பொறுப்பேற்க உள்ளார். பிகாரில் கடந்த மாதம் ஒன்றரை கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகளில் தலா 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது. இது விமர்சிக்கப்பட்டாலும், நிதிஷ்குமாரின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

71% பெண்களுக்கு என்டிஏவுக்கு வாக்களிப்பு

தேர்​தலில் 71 சதவீதத்​துக்​கும் அதி​க​மான பெண் வாக்​காளர்​கள் என்​டிஏவுக்கு வாக்​களித்​தனர்​. ரூ.10,000 நிதி​யைப் பெற்ற பெண்​கள் மட்​டுமல்​லாமல், அவர்​களது குடும்​பத்​தினரும் முழு ஆதரவை தந்து இருக்கிறார்கள். நலத் திட்​டங்​களால் முதல்​வர் நிதிஷ் மீது மக்​கள் மிகுந்த நம்​பிக்கை வைத்து வாக்​களித்​துள்​ளனர்​.

====