No takers for government jobs! Only one woman selected for 8 posts: A peculiar situation in Madhya Pradesh! google
இந்தியா

அரசு வேலைக்கு ஆள் இல்லை! : 8 பணியிடங்களுக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே தேர்வு : மத்தியப் பிரதேசத்தில் விநோதம்!

மத்தியப் பிரதேசத்தில் 8 வனக் காவலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற சிறப்பு ஆள்சேர்ப்பு முகாமில், ஒரே ஒரு பெண் மட்டுமே தேர்வு. முழு விவரம்!

Kavitha prasanna

No takers for government jobs! Only one woman selected for 8 posts: A peculiar situation in Madhya Pradesh!

லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரு சில அரசுப் பணியிடங்களுக்காகக் கடுமையாகப் போட்டியிடும் தற்போதைய சூழலில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 'சிதி' வனக்கோட்டத்தில் நடைபெற்ற ஒரு விநோதமான வனக் காவலர் ஆள்சேர்ப்பு முகாம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2026-ஆம் ஆண்டிற்கான சிறப்பு ஆள்சேர்ப்பு முகாமின் கீழ் அறிவிக்கப்பட்ட எட்டு காலிப் பணியிடங்களில், தகுதியான விண்ணப்பதாரர்கள் வராததால் ஏழு பணியிடங்கள் காலியாகவே எஞ்சியுள்ளன.

நலிவடைந்த பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

பைகா, பாரியா மற்றும் சஹாரியா ஆகிய மிகவும் நலிவடைந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக இந்த 8 வனக் காவலர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதில் 5 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 1 இடம் முன்னாள் ராணுவத்தினருக்கும், 2 இடங்கள் ஊர்க்காவல் படைத் தன்னார்வலர்களுக்கும் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் விண்ணப்ப பரிசீலனைக்குப் பிறகு, தகுதியான 25 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

ஆச்சரியமளித்த ஒரே ஒரு பெண் விண்ணப்பதாரர்

கடந்த ஜூன் 23 அன்று நடைபெற்ற இறுதித் தேர்வு முகாமில், அழைப்பு விடுக்கப்பட்ட 25 பேரில் ஒரே ஒரு பெண் விண்ணப்பதாரர் மட்டுமே நேரில் ஆஜரானார்.

அதுமட்டுமின்றி, அவர் சிதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல; உமரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். வனத்துறையின் கடினமான விதிமுறைகளின்படி, பெண்களுக்கு விதிக்கப்பட்ட 15 கிலோமீட்டர் தூர நடைப்பயிற்சித் தேர்வை (ஆண்களுக்கு 25 கி.மீ) அந்தப் பெண் வெற்றிகரமாகக் கடந்து, இப்பணிக்கு தகுதி பெற்றார்.

கோட்ட வன அலுவலர் பிரீத்தி அஹிர்வார்

"அனைத்து விதிகளும் முறைப்படி பின்பற்றப்பட்டன, ஒருவர் மட்டுமே வந்ததால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

லட்சக் கணக்கானோர் வேலை தேடும் காலகட்டத்தில், தகுதியான ஆட்கள் இல்லாததால் 7 அரசுப் பணியிடங்கள் காலியாகக் கிடப்பது தற்போதைய நிர்வாகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

=====