number of MBBS seats in India has risen to 139,489 AI generated
இந்தியா

”1,39,489 இடங்கள், 844 மருத்துவ கல்லூரிகள்” : MBBS இடங்கள் இரண்டு மடங்காக உயர்வு : மாணவர்கள் மகிழ்ச்சி..!

இந்தியாவில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 1,39,489ஆக உயர்ந்துள்ளது.

Kannan

மத்திய அரசு தகவல்

Under government initiatives led by the central administration, India's undergraduate MBBS seats have more than doubled, growing from 51,348 in 2014 to 1,39,489. Total medical colleges nationwide have also increased from 387 to 844,

“இந்தியாவில் 2014க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ கல்லூரிகள் 844

இதுகுறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 2014ல் 387ஆக இருந்த நிலையில் தற்போது 844ஆக உயர்ந்துள்ளது.

எம்பிபிஎஸ் இடங்களும் அதிகரிப்பு

இதேபோல், இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 51,348லிருந்து 1,39,489ஆக அதிகரித்துள்ளது.

முதுகலை மருத்துவ இடங்களும் உயர்வு

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 31,185லிருந்து 86,360ஆக அதிகரித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட வசிப்பிட திட்டம், முதுகலை மாணவர்கள் தங்கள் பயிற்சியின்போது ஒரு பகுதியாக மாவட்ட மருத்துவமனைகளில் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும்.

கிராமப்புறங்கள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் இடங்கள் அதிகரிப்பு

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ள 2026-27 கல்வியாண்டுக்கான புதிய ஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டிலும் மருத்துவ இடங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

150 இடங்கள் கூடுதல்

திருவள்ளூர், திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் கூடுதலாக 150 அரசு எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்த இடங்கள் 13,999

நடப்புக் கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அனைத்தையும் சேர்த்து, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 950 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு, மொத்த இடங்களின் எண்ணிக்கை 13,999 ஆக உயர்ந்துள்ளது.

======