Number of women using the internet has doubled: NFHS report  google
இந்தியா

இணையத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிகை இரு மடங்கு அதிகரிப்பு : 64.3% NFHS அறிக்கை

தேசிய குடும்ப சுகா​தார ஆய்வு அறிக்கையில் ( என்எப்​எச்​எஸ்​-6 ) இணையத்தை பயன்படுத்தும் பெண்களின் சதவீதத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது

Rohini

NFHS-6 ஆய்வு

NFHS-6 ஆய்வானது, 2023-24 ஆம் ஆண்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது

டிஜிட்டல் அணுகு முறையின் ஒரு புதிய மாற்றம்

குறிப்பாக இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது, இது பெண்களிடையே டிஜிட்டல் அணுகலில் ஒரு பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.

ஆறாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் (NFHS-6) படி, குறைந்தபட்சம் ஒரு முறையாவது இணையத்தைப் பயன்படுத்திய பெண்களின் சதவீதம், 2019-2021 காலகட்டத்தில் 33.3 சதவீதத்திலிருந்து 2023-24ல் 64.3 சதவீதமாக, கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

வங்கி , சேமிப்பு கணக்கு வைத்திருகும் பெண்களின் எண்ணிக்கையும் உயர்வு

வங்கி அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 2019-2021-ல் (NFHS-5) 78.6 சதவீதத்திலிருந்து 2023-24-ல் (NFHS-6) 89 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஆறாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது

தனிப்பட்ட கைப்பேசி : பய்னபாடு அதிகரிப்பு

ஆறாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல தனிப்பட்ட கைபேசி வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 2019-2021-ல் 53.9 சதவீதத்திலிருந்து 2023-24-ல் 63.6 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

===================