Officer Bhawana Kanth achieved first woman to complete Indian Air Force's most rigorous training Ai generated
இந்தியா

”20 வார கால TACDE சவாலான பயிற்சி” : விமானப் படையில் ‘டாப் கன்’ : சாதனை படைத்த முதல் பெண் அதிகாரி பாவனா காந்த்...!

இந்திய விமானப்படையில் மிகக் கடுமையான பயிற்சியை முடித்த முதல் பெண் என்னும் சாதனையை படைத்து இருக்கிறார் பாவனா காந்த் என்ற அதிகாரி.

Kannan

இந்திய விமானப்படை

இந்​திய விமானப் படை​யில் முதன்முறையாக அதிநவீன ‘பைட்​டர் காம்பாட் லீடர்’ படிப்பை வெற்​றிகர​மாக நிறைவு செய்​து, இந்​தி​யா​வின் முதல் பெண் ‘டாப் கன்’ போர் விமானி என்ற வரலாற்​றுச் சாதனையை ஸ்கு​வாட்​ரன் லீடர் பாவனா காந்த் படைத்​துள்​ளார்.

20 வாரங்கள் கடின பயிற்சி

சுமார் 20 வாரங்​கள் நடை​பெற்ற அதிதீ​விர வான்​வழித் தாக்​குதல் மற்​றும் உத்​தி​களுக்​கான உயர் பயிற்​சியை நிறைவு செய்​ததன் மூலம், நாட்​டின் தலைசிறந்த போர் விமானிகளின் வரிசை​யில் அவர் இணைந்​துள்​ளார்.

தலைசிறந்த போர் விமானி

விமானப் படை​யின் மிக உயரிய மற்​றும் கடுமை​யான பயிற்சி மையங்​களில் ஒன்​றான குவாலியரில் உள்ள ‘டேக்​டிக்ஸ் அண்ட் ஏர் காம்​பாட் டெவலப்​மென்ட் எஸ்​டாப்​ளிஷ்மென்ட்’ மையத்​தில் இந்​தப் பயிற்சி வழங்​கப்​படு​கிறது.

பாவனா காந்த் சாதனை

33 வயதாகும் பாவனா காந்த், பிஹார் மாநிலம் தார்​பங்​கா​வில் பிறந்​தவர். சிறு​வயது முதலே விமானி​யாக வேண்​டும் என்ற கனவோடு வளர்ந்த இவர், இந்​திய வான்​வழி வரலாற்​றில் பல்​வேறு திருப்​பு​முனை​களை ஏற்​படுத்​தி​யுள்​ளார்.

இந்தியாவின் முதல் பெண் போர் விமானி

இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக பெண்​களுக்​குப் போர் விமானி கதவு​கள் திறக்​கப்​பட்​ட​போது, அவனி சதுர்​வேதி மற்​றும் மோகனா சிங் ஆகியோ​ருடன் இணைந்து நாட்​டின் முதல் பெண் போர் விமானி​யாக பொறுப்​பேற்​றார்.

பெண்களுக்கு சிறந்த வழிகாட்டி

பெண் போர் விமானி​யாகப் பொறுப்​பேற்​றது முதல், தற்​போது மிக​வும் கடின​மான ‘டாப் கன்’ படிப்பை நிறைவு செய்​தது வரையி​லான பாவனா காந்​தின் 8 ஆண்​டு​கால உழைப்​பு, இந்​தி​யப் பாது​காப்​புப் படைகளில் தடம் பதிக்​கும் ஆயிரக்​கணக்​கான இளம்​ பெண்​களுக்​குப்​ மிகப்​பெரிய உத்​வேக​மாக அமைந்​துள்​ளது.

இந்திய விமானப்படை வரலாற்றிலேயே 'ஃபைட்டர் காம்பாட் லீடர்' பயிற்சியை நிறைவு செய்த முதல் பெண் போர் விமானி என்ற பெருமை இவரைச் சென்றுடைந்துள்ளது.

இனி இவர் சிக்கலான வான் போர் நடவடிக்கைகளுக்குத் தலைமை வகிப்பார் என்பதோடு, விமானப் படையின் முன்னணி போர் தந்திர நிபுணர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ளார்.

=========================