2029 -தேர்தல் முன்னெடுப்பு :
2029 மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்கு முன் நடைபெறவுள்ள முக்கிய மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது தேசிய அமைப்பில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் வெளியிடப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
அனுபவம் மற்றும் புதிய தலைமுறை இணையும் புதிய அணி :
புதிய தேசிய அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுடன் புதிய தலைமுறை தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜே, ராம் மாதவ், பியூஷ் கோயல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் புதிய பொறுப்புகளை பெற்றுள்ளனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் :
வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம்
அடுத்த ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மாற்றங்கள் நிகழ்ந்துருப்பதாக மேல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன இதில் குறிப்பாக உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வர இருக்கின்றன
எனவே அமைப்பு ரீதியாக மற்றும் கட்சி ரீதியாக கட்சியை கட்டமைப்பது குறித்து தீவிர யோசனைக்கு பிறகே இந்த மாற்றம் நிகழ்ந்துருப்பதாக தகவல் வருகின்றன .
மோடி தலைமையின் அடுத்தகட்ட அரசியல் திட்டம் :
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2029 தேர்தலுக்கான அரசியல் அடித்தளத்தை இப்போதே அமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
அதற்கான முதல் பெரிய அமைப்பு மாற்றமாக இந்த புதிய தேசிய அணி பார்க்கப்படுகிறது. தேர்தல் இயந்திரத்தை மேலும் வலுப்படுத்தி தேசிய அளவில் தனது ஆதரவை விரிவுபடுத்தும் நோக்கில் கட்சி செயல்பட்டு வருகிறது.
வானதி ஸ்ரீனிவாசனும் தேசிய மகளிர் அணி பொறுப்பில் இருந்து விடுவிப்பு :
தேசிய மகளிரணி தலைவியும் தமிழக பாஜக வில் முக்கிய தலைவர்களுள் ஒருவரான வானதி அவர்களுடைய பதவியும் விடுவிக்கப்பட்டு அந்த இடத்தில் ரூப் குமார் சவுத்ரி அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது .
இவர் தற்போது மகாசமுந்த் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகப் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .