An orange alert has been issued for Chennai due to the possibility of extremely heavy rainfall
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரம் பெற்று வருகிறது. வட தமிழகம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பகல் நேரத்தில் சற்று வெயில் அடித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.
23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னையின் ஒரு சில இடங்களில், புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்கக் கடலில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு, மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழகத்தில் தீவிரம் பெறும் மழை
சென்னையின் பிற பகுதிகளிலும் இன்று மாலை மழை தொடங்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் பருவமழை தீவிரமடையும் என்றும், இதனால் பகலில் திடீரென குறுகிய நேரத்தில் விட்டுவிட்டு கனமழை பெய்யக் கூடும்.
பகலில் வெயில், இரவில் மழை
இடையிடையே அவ்வப்போது வெயில் இருக்கும் என்றும், மாலையில் தீவிரமாகும் மழை, இரவு முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்படுகிறது.
சூப்பர் எல் நினோ தாக்கம் இருந்தலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====