Pahalgam Attack Commemoration Day: "India Will Never Bow Down" - PM Modi Pays Tribute to the Martyred source:google
இந்தியா

பஹல்காம் தாக்குதல் நினைவு நாள் : "இந்தியா ஒருபோதும் அடிபணியாது" : வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி!

யங்கரவாதத்தை வேரறுப்பதில் இந்தியா காட்டி வரும் உறுதிப்பாட்டை பிரதமரின் இந்தப் பதிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

S Kavitha

பஹல்காம் தாக்குதல் நடத்து ஓராண்டு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி

இந்தத் துயரமான தினத்தில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மீள்பார்வை

கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான டிஆர்எஃப் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியது.

பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

மூன்று பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூட்டில், 25 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.

இந்தியாவின் அதிரடி பதிலடி

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் ‘ஆபரேஷன் மஹாதேவ்’ ஆகிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து

ராணுவ ரீதியான பதிலடி மட்டுமின்றி, ராஜதந்திர ரீதியாகப் பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்து அதிரடி காட்டியது.

தீவிர கண்காணிப்பில் பஹல்காம்

தற்போது பஹல்காம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் மோடியின் உருக்கமான பதிவு

பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது...!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது.

அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த தேசமும் உறுதுணையாக நிற்கிறது.

பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இந்திய மண்ணில் எடுபடாது

எந்த வடிவத்திலான பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதிகளின் கீழ்த்தரமான சதித் திட்டங்கள் இந்திய மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது என பதிவிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இந்தியா காட்டி வரும் உறுதிப்பாட்டை பிரதமரின் இந்தப் பதிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

=====