Pakistan Minister Musadik Malik India Visit SCO Summit Taj Mahal
டெல்லி எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சர் பங்கேற்பு
டெல்லியில் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான முசாதிக் மாலிக் இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவின் அழைப்பின் பேரில் தனது மனைவி மற்றும் பாகிஸ்தான் நாட்டின் மூத்த அதிகாரிகளுடன் அவர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
பாகிஸ்தான் மீதான ’ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி நடவடிக்கை
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
2023 ஆம் ஆண்டிற்குப் பின் 2026-ல்
அந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். முன்னதாகக் கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியாவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாஜ்மஹால், ஹுமாயுன் கல்லறையைப் பார்க்க விருப்பம்
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சுற்றிப் பார்க்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஹாக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் டெல்லியில் உள்ள ஹுமாயுன் கல்லறை ஆகியவற்றை பார்வையிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. ஆனால், பாகிஸ்தான் அமைச்சருக்கு எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அனுமதி நிலவரம்
பாகிஸ்தான் அமைச்சர் சுற்றிப் பார்க்க விரும்பும் இடங்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும். அதன்படி, தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஹுமாயுன் கல்லறைக்கு செல்ல இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் முக்கிய நகர்வு
கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கும் பாகிஸ்தானின் முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள எஸ்சிஓ உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கும் இந்தப் பயணம் வழிவகை செய்யும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
======================